மேலும் அறிய

Tamilnadu Lockdown News: ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..! 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை.

தமிழ்நாட்டில் நாளை முதல் மாவட்டங்களுக்குள்பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.       

தமிழ்நாட்டில் நாளை முதல் மாவட்டங்களுக்குள்பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை  காலை 6 மணியுடன் முடிவடிகிறது. 

இந்நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து, முதல்வர் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்," தற்போது நடைமுறையில் உள்ள இந்த  ஊரடங்கை 28-6-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • வகை 1 - (11 மாவட்டங்கள்) :கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை மாவட்டங்கள்
  • வகை2 (23 மாவட்டங்கள்) : அரியலூார், கடலூர், தருமபுரி, திண்டுக்கல்,கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, மதுரை, பெரம்பலூர். சிவகங்கை தேனி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை. தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்
  • வகை 3 - (4 மாவட்டங்கள்) :  சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

வகை- 2  மாவட்டங்கள்:  

மேலும்,வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுபதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதனாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்,காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணிர் முதல் பாலை 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • உணவகங்கள் பற்றும் அடுமணைகளில் (Hotels, Restraunts and bakkeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவி 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • மின் வணிகம் (E Commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-comIce) அனைத்தும் காலை 05.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.
  • இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 பணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அரசின் அனைத்து அத்தியாயசியத் துறைகள் 100% பணியாளர்களுடன்  செயல்பட அனுமதிக்கப்படும்... இதர அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க  அனுமதிக்கப்படும்.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள், 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும்  நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்   
  • மின் பொருட்கள், பல்புகள் கேபிள்கள்,ஸ்விட்சுகள் மற்றும் ஓயர்கள் விற்பளை செய்யம் சுடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல்  மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் 
  • வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கூடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 
  • மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • மண்பாண்டம் மற்றும் கைவிளைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • மின் பணியாளர் (Electrians), பிளம்பர்கள் (Pumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள், சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  • காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.
  • திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  • வாடகை, வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.  மேலும், வாடகை  டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
  • வீட்டு வசதி நிறுவனம் (HFCs), வங்கி சாரா நிதி நிறுவனங்கள்(NBFC) குறு நிதி நிறுவனங்கள்  (MFIs) 33 சதவிகித பாரியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 


Tamilnadu Lockdown News: ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..! 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை.

 

மேலும், வகை 3-ல் உள்ள மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடையாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (Hotels, Restraunts and bakkeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (E-commurce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 
  • இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commarce) அனைத்தும் காலை 06.00 மணி  முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்
  • இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள்  ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.
  • சிறார்களுக்கான கண்காணிப்பு/பராமரிப்பு சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.   
  • அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் இயங்க  அனுமதிக்கப்படும்.
  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 
  • இதா தொழிற்சாலைகளும் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படும். செயல்பட
  • மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாவை 7.00 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
  • மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் அனுமதிக்கப்படும். மாலை 7.00 மணி வரை செயல்பட
  • கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பாத்திரக் கடைகள்,பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மண்பாண்டம் மற்றும் கைவிளைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
  • மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின்  விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும. 
  • சாலையோர் உணவுக் கடைகளில் பார்சல் மட்டும்  சேவை மட்டும் காலை 9.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • கணினி பொருட்கள், மென்பொருட்கள், மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.   
  • கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 ணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அழகு நிலையங்கள். சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலை 6.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.
  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  • திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும்.  படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ள வேண்டும். 
  • படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.
  • திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  • மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவாத்து நிலையான குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, வாடகை வாகளங்கள் டேக்ஸிகன் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர்.


Tamilnadu Lockdown News: ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..! 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை.

பொது:  திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்காள இபாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணைணயவழியாக (https://aregister toega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும்,  நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை! சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஊரடங்கு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.      

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election 2026: ஒத்தையில போயி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளர்! என்ன நடக்குது திருத்தணியில?
TN Election 2026: ஒத்தையில போயி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளர்! என்ன நடக்குது திருத்தணியில?
தங்கத்தை விட விலை உயர்ந்த எலுமிச்சை! ஒரு லட்சத்தைத் தாண்டிய ஏலத் தொகை - விழுப்புரம் அருகே ஆச்சரியம்!
தங்கத்தை விட விலை உயர்ந்த எலுமிச்சை! ஒரு லட்சத்தைத் தாண்டிய ஏலத் தொகை - விழுப்புரம் அருகே ஆச்சரியம்!
சென்னை டூ கடலூர்: இனி 3 மணி நேரம்தான்! பயணிகளின் ஃபேவரிட் தேர்வாகும் ECR சாலை!
சென்னை டூ கடலூர்: இனி 3 மணி நேரம்தான்! பயணிகளின் ஃபேவரிட் தேர்வாகும் ECR சாலை!
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Iran Hit List: பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
Embed widget