Destitute Women Welfare : ஆதரவற்ற பெண்கள் நலவாரியம்.. அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, சமூக நலவாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது.
இதன் மூலம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, நலிவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் பிரச்சனைகளை களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ம் தேதி சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் பெண்களுக்கு சம வாய்ப்பு, சம உரிமை ,பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியலில் வாய்ப்பு பெறவும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் என்றும், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ,நலிவுற்ற ,ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதி செய்ய அவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் சரியாக ஓராண்டுக்கு பின் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைத்ததற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 01.09.2021 அன்று பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
"தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல் அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான சுய உதவிக் குழுக்கள் அமைப் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட ற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து கரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் என திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற போன்ற தேவையான திட்டங்க சிறப்பான முறையில் வாழ்வ மகளின் நல வாரியம் அமைக்கப்படும் “ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சமூக நல இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலித்தப் பின்னர், அரசு, பின்வரும் ஆணைகளை வெளியிடுகிறது.
- தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது. தொழிற்பயிற்சிகள் வழங்குதல் "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்" ஒன்று உருவாக்கப்படுகிறது.
போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டமாக, இணைப்பில் குறிப்பிட்டுள்ள விரிவான நெறிமுறைகளின்படி செயல்படுத்துவதற்கு சமூக நல இயக்குநருக்கு அனுமதியளிக்கப்படுகிறது.