மேலும் அறிய

மருத்துவர்கள், செவிலியர்கள் விடுதிக்கட்டணம் முறைப்படுத்தப்பட்டதால் மிச்சமானது ரூ.30 லட்சம் : தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான உணவு மற்றும் விடுதிக்கட்டணத்தில் சுமார் ரூபாய் 30 லட்சம் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து மக்கள் சேவைபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தரமான உணவு மற்றும் பிரசித்தி பெற்ற உயர்தர விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் களையப்பட்டு சரியான முறையில் நடைமுறைப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார். கொரோனா பேரிடரில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு புறநகர் மருத்துவமனைகள், அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை, கிண்டி கிங் வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. அயனாவரம், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான இருப்பிட வசதியும், மூன்று வேளை தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்று முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன.

மருத்துவர்கள், செவிலியர்கள் விடுதிக்கட்டணம் முறைப்படுத்தப்பட்டதால் மிச்சமானது ரூ.30 லட்சம் : தமிழக அரசு தகவல்

இதன்பேரில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவபணியாளர்களுக்கு உயர்தர தங்கும் விடுதிகளில் தங்குமிட வசதியும், தரமான உணவும் வழங்கிட முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் மா.சுப்ரமணியன் நடவடிக்கையின்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கு உயர்தர தங்கும் விடுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதில் அவர்களைத் தங்கவைக்க வேண்டும் என்றும், சென்னையில் உள்ள தரம் மற்றும் பிரசித்த பெற்ற உணவகங்ளில் இருந்து அவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்க ஒரு நபருக்கு சாதாரண உணவகங்களில் இருந்து உணவுக்கென்று ரூபாய் 600 முதல் ரூபாய் 550 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 21.5.2021க்கு பிறகு அடையாறு ஆனந்த பவன், வசந்தபவன், சரவண பவன், சங்கீதா போன்ற உயர்தர சைவ உணவகங்களில் இருந்தும், வசந்த பவன் குரு மெஸ், நந்தனாஸ் ஆகிய அசைவ உணவகங்களில் இருந்தும் தரம் உயர்ந்த புரதச்சத்து மிகுந்த சைவ மற்றும் அசைவ உணவுகள் ரூபாய் 450-க்கு சென்னையில் வழங்கப்படுகிறது. அதுபோல தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 375, ரூபாய் 350 என்று மாவட்டத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் விடுதிக்கட்டணம் முறைப்படுத்தப்பட்டதால் மிச்சமானது ரூ.30 லட்சம் : தமிழக அரசு தகவல்

செவிலியர்கள் தங்கும் வசதி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாதாரண விடுதியில் தங்குவதற்கு ரூபாய் 900 என விலை இருந்தது. இந்த நிலையில், கடந்த மே மாதம் 21-ஆம் தேதிக்கு பிறகு, விஜய் பார்க், வெஸ்ட்டின் பார்க், சபரி இன், பிரியதர்ஷினி பார்க், சென்னை கேட்வே, அருணாச்சல ரெசிடன்சி போன்ற உயர்தர தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனாலும், அதற்கு ஒரு நாள் தொகை ரூபாய் 900-இல் இருந்து ரூபாய் 750 என குறைக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கொரோனா பேரிடரில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு ஆகும் செலவில் இருந்து எந்தவித இடையூறும், கையூட்டும் இல்லாமல் பயனாளர்கள் முழுமையான பயனை அடையவும், அதே வேளையில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு அரசுக்கு ஏற்படும் செலவீனம் ஏறத்தாழ ரூபாய் 30 லட்சம் தமிழ்நாடு முழுவதும் மிச்சப்படுத்தப்படுகிறது. பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா பேரிடர் முடிவுக்கு வரும் நிலையில், இதுகுறித்து துறை ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ககன்தீப் சிங் வகுத்த வியூகம்... சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget