காவல்துறையை செம்மைப்படுத்த வேண்டுமா? பொதுமக்களே உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
காவல்துறையின் பணியை செம்மைப்படுத்த பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
TN Goverment: காவல்துறையின் பணியை செம்மைப்படுத்த பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை செம்மையாக பணியாற்ற பொதுமக்களின் கருத்துகளை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
காவல் துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு 5வது காவல் ஆணையம் (Police Commission) அமைத்துள்ளது. ஆணையம் அசோக்நகர், சென்னை காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. காவல் பணியினை செம்மைப்படுத்த பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.
முகவரி:
தலைவர்,
5.வது காவல் ஆணையம்,
காவல் பயிற்சி கல்லூரி வளாகம்,
அசோக்நகர்,
சென்னை - 83
மின் அஞ்சலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். fifthpalcecommisionpigrmat.com என்ற மின் அஞ்சல் மூலம் மக்கள் தங்களது கருத்துகளை அனுப்பலாம். நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள் 05.12.2023 அன்று காலையில் 10.30 மணி முதல் பிற்பகல் மணி வரை முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழக்கண்ட கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 9791987112 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.