மேலும் அறிய

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2023-2024 ம் ஆண்டிற்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

 கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரித்து நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது.

அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் அதிகரித்து வருகிறது. கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.215, தமிழக முதல்வரின் ஆணையின்படி வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், 2024-25 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மத்திய அரசு 2023-24 ஆம் அரவைப்பருவத்துக்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2919.75/-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது.

சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.3134.75:

 அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழகத்தில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
இபிஎஸ் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி... மீண்டும் சேலத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்!
இபிஎஸ் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி... மீண்டும் சேலத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்!
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
Nelson : கவின் இந்த படத்துக்கு வேண்டாம்...நட்ப உள்ள கொண்டு வந்து என்ன கவுத்திடாத...பிளடி பெக்கர் டிரைலர் லாஞ்சில்  நெல்சன்
Nelson : கவின் இந்த படத்துக்கு வேண்டாம்...நட்ப உள்ள கொண்டு வந்து என்ன கவுத்திடாத...பிளடி பெக்கர் டிரைலர் லாஞ்சில் நெல்சன்
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Embed widget