மேலும் அறிய

Digital Marketing Training: டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரியணுமா? தமிழ்நாடு அரசின் 3 நாள் பயிற்சி முகாம் - எப்போது? எங்கே?

தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.

Youtube Channel Training: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. 

சென்னையில் 3 நாள் பயிற்சி:

செல்போன் வைத்திருக்கும் பலரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.

இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கை கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. ஏற்கனவே பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதேபோல, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அழகுக்கலை பயிற்சியும் (பியூட்டிஷியன்-மேக்கப்) நடைபெற உள்ளது. 

எப்போது, எங்கே நடைபெறுகிறது?

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் மற்றும் அழகுக்கலை குறித்த பயிற்சி வரும் 21.02.2024 முதல் 23.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கியத்துவம் என்ன?

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,

சிட்கோ தொழிற்பேட்டை,

பார்த்தசாரதி கோயில் தெரு,

இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,

சென்னை – 600 032

44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022  என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

AIADMK - BJP: தங்கமணி - வானதி சீனிவாசன் சந்திப்புக்கு காரணம் என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தலைப்பு செய்திகள்

TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget