மேலும் அறிய

AIADMK - BJP: தங்கமணி - வானதி சீனிவாசன் சந்திப்புக்கு காரணம் என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜக வுடன் கூட்டணி இல்லை, நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே  பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்துக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தாக்கப்படும் மீனவர்கள்:

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” சிந்தனை சிற்பியின் புகழை போற்றும் வகையில் அதிமுக ஆட்சியில் மணிமண்டபமும், ஒரு ஆண்டும் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் பரிசு தொகையும், எட்டு கிராம் தங்கமும் கொண்ட விருது வழங்கவும் ஆவணம் செய்யப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து நாளில் இருந்து மீனவ மாவட்டங்கள் தொடர்ந்து சொல்வேனா துயரத்துக்கு ஆளாகி வருகிறது. இலங்கை கடற்படையிடம் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.

போதை பொருள் நடமாட்டம்:

கடந்த நான்காம் தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். 20 மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மீனவர்களை விடுவிக்க மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவற்றை கண்டு கொள்ளாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை இரும்பு கரம் கொண்டு ஒழிக்காமல் கரும்பு கரம் காட்டுவதால் தான் தமிழகத்தில் போதை கஞ்சா கலாச்சாரம் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கஞ்சா போதை வஸ்துகள் ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காததால் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது, போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும்.

சந்திப்பு ஏன்?

பாஜக உடன் கூட்டணி இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டோம். பாஜக கூட்டணிக்கு அதிமுக கதவு எப்போதோ அடைக்கப்பட்டது.  நீட் விவகாரத்தில் மோசடி பேர்வழி திமுக. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி உள்ளது திமுக. சட்டமன்றத்தில் நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே  பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர்”  என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget