Tamilnadu Flood | வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வருகை - டி.ஆர் பாலு
நெருக்கடியைச் சந்திக்க தமிழக அரசு கோரிய அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க ஆய்வு குழு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
மாநிலத்தில் நிலவும் மழை வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்தியக் குழு இன்று தமிழ்நாடு வருவதாக நாடாளுமன்ற உறப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
மாநிலத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை தொடங்கவும், நெருக்கடியைச் சந்திக்க தமிழக அரசு கோரிய அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கவும் ஆய்வு குழு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
முன்னதாக, அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்ட முதல்வர் உடனடியாக நிவாரணங்கள் அறிவித்தார். அறுவடைக்குத் தயாராக இருந்து வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும். (ஏக்கருக்கு ரூ.8,163 மட்டும்) இத்துடன் நடவு செய்து 15 நாட்களைத் தாண்டாத நிலையில் ஏற்பட்ட வெள்ளத் தாக்குதலில் அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6083 மதிப்புள்ள (ஏக்கருக்கு ரூ.2,483/) இடுபொருள் வழங்கப்படும், சாலைகள், பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க 300 கோடி நிதியொதுக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.2079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டிஆர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார். முதற்கட்டமாக ரூ.550 கோடியை நிவாரண நிதியை வழங்க வேண்டுமென்றும் அமித்ஷாவிடம் டிஆர் பாலு எம்பி வலியுறித்தினார்.
முன்னதாக, தமிழக அரசின் நிவாரண அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இந்தியக் கம்யூனின்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஏதும் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட பழைய தொகுப்பு வீடுகள் பல இடங்களில் வசிக்க முடியாத நிலைக்கு இடிந்து விழுந்து சேதம் அடைந்துவிட்டன. இந்த வீடுகளைப் புதுப்பித்துக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை நிவாரண அறிவிப்பில் இடம் பெறவில்லை என்பதை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் அடித்தட்டு மக்களின் கோரிக்கை குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்
சேலம்: கனமழை காரணமாக வயலில் சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்