TN Covid 19 UPdate: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 542 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக உள்ளது.
மாவட்டங்கள் நிலவரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 46 பேரும், சென்னை மாவட்டத்தில் 44 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
Today #COVID19 status for #TamilNadu reports 98 new cases of covid , For #Chennai 44 new cases . Total number of cases for Chennai rises to 752533 #TNCoronaUpdate #MaskUp pic.twitter.com/I5nlyRW2Ky
— Rain@Chennai (@RainChennai1) May 31, 2022
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 025 ஆக உள்ளது.
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.6 கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
#TamilNadu | #COVID19 | 30 May 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) May 30, 2022
District Wise Data#TNCoronaUpdates #coronavirus pic.twitter.com/uxvysKGfSu
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்