Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 9,118 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில், அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 1,227 பேர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60 நாட்களுக்குப் பிறகு, மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்துள்ளது.
புதிதாக, கடந்த 24 மணி நேரத்தில் 22,720 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 210 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் 8 ஆயிரத்து 633 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 492 நபர்களுக்கு புதியதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,089 நபர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 210 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 287 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று மட்டும் 19 ஆயிரத்து 860 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆந்திராவில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன ?
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 6 ஆயிரத்து 341 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆந்திரா முழுவதும் 18 லட்சத்து 39 ஆயிரத்து 243 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஆந்திராவில் 8 ஆயிரத்து 486 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.





















