சீட்டு காலியா இருக்கு! ஆளு எங்க? முதலமைச்சரின் திடீர் ஆய்வில் சிக்கிய அதிகாரி! உடனடியாக சஸ்பெண்ட்!
ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளுக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார்.நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதேபோல் இன்று ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணி நேரத்தில் விடுதி கண்காணிப்பாளர் இல்லை.பணி நேரத்தில் விடுதியில் இல்லாத அதிகாரி குறித்து கேட்டறிந்த முதல்வர், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதன்படி துறைரீதியிலான அதிகாரிகள் அந்த கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தனர்.
#Live: இராணிப்பேட்டை மாவட்டப் புதிய ஆட்சியரக வளாகம் திறப்பு https://t.co/xQn4wcXz0C
— M.K.Stalin (@mkstalin) June 30, 2022
திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். நேற்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூருக்கான ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும், 129 கோடி மதிப்பில் முடிந்துள்ள 28 நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும் செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுவையும் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், மக்களின் முகங்களைப் பார்க்கும்போது அத்தனை சோர்வும் மறைந்து புது மலர்ச்சி ஏற்படுகிறது! திருப்பத்தூரிலும், மாலை வேலூரில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும், வழியெங்கும் திரண்டு என்னை வரவேற்று - நலம் விசாரித்த மக்களின் பாசத்தால் நெகிழ்ந்தேன் எனக் குறிப்பிட்டார்.
மக்களின் முகங்களைப் பார்க்கும்போது அத்தனை சோர்வும் மறைந்து புது மலர்ச்சி ஏற்படுகிறது!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
காலை திருப்பத்தூரிலும், மாலை வேலூரில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும், வழியெங்கும் திரண்டு என்னை வரவேற்று - நலம் விசாரித்த மக்களின் பாசத்தால் நெகிழ்ந்தேன்! pic.twitter.com/MI6srLL0Np
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்