மேலும் அறிய

CM Stalin congrats: கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - கன்னட விருது பெற்ற எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து...

குவெம்பு ராஷ்ட்ரிய புராஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக நீதி குறித்த புத்தகங்கள்  எழுதி வரும் எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட விருதான குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வாழ்த்து:

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, 

”கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்!” என தெரிவித்துள்ளார். 
 
எழுத்தாளர் இமயம் பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் தனது எழுத்துகள் மூலம் பல்வேறு சமூக சிக்கல்கள் குறித்தும் சமூக ஒடுக்க முறைகள் குறித்தும் வெளிபடுத்தி வருகிறார். அவருடைய கோவேறு கழுதைகள், செடல், எங் கதே, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்கள பெரும் வரவேற்பை பெற்றன. 
 
விருது:
 
கடந்த 2020 ஆம் ஆண்டு, செல்லாத பணம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இளநிலை ஆய்வு நல்கை, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் தமிழ்த்தென்றல் திருவிக விருதுகளையும் பெற்றுள்ளார் இமையம். இந்நிலையில், கன்னட உயரிய விருதான குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.  இந்நிலையில், இந்தாண்டு தமிழுக்காக எழுத்தாளர் இமயம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் இமயத்தின் இயற்பெயர் அண்ணாமலை. விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் பன்முகத் திறமை படைத்தவர். சாதி ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படையாக விமர்சித்து வரும் இமையம் திராவிட கொள்கையில் பற்று மிக்கவர். 

1994 ஆம் ஆண்டு இவர் எழுதிய கோவேறு கழுதைகள் என்ற நாவல் மூலம் வாசகர்களை தனது வசிய எழுத்துக்களால் கட்டிப்போட்டார். அன்று தொடங்கிய இமயத்தின் எழுத்துப்பயணம் 25 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இவருக்கு கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கிய தோட்ட அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டுக்கு இயல் விருதை வழங்கி கவுரவித்தது. இவரது முதல் நாவலான கோவோறு கழுதைகள் ஆங்கிலத்தில் BEAST OF THE BURDERS என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு விற்பனையில் சக்கைபோடு போட்டது.

மிக மிக எளிமையான மொழி நடையில் அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களின் துன்பங்களை பேசும் நாவல்களை எழுதி வருபவர் இமையம். இந்நிலையில், தற்போது விருது பெற்றுள்ள ராஷ்ட்ரிய புரஸ்கார் விருதுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read: CM Stalin : தமிழகம் முழுவதும் சாலைகள் செம்மையா இருக்கனும்; ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget