(Source: Poll of Polls)
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூடுதல் பாதுகாப்பு நியமனம்.. படை எடுக்கும் மத்திய பாதுகாப்பு படையினர்..
ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு மேலும் 3 மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு மேலும் 3 மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது, இன்று வேட்புமனு சரிபார்க்கப்பட்டு வருகிறது. வேட்ப மனுவை திரும்ப பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தரப்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சில தினங்களுக்கு முன் அறிவித்தார். ஈரோடு இடைத்தேர்தலுக்காக 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். பிப்ரவரி 12ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 2ம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் பட்சத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. Sensitive zone (அ) பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
வாக்கு பதிவு செய்யும் இவிஎம் மிஷின்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். அதேபோல், வாக்கு பதிவு செய்யும் நாளான் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள். வன்முறையில் ஈடுபடும் நபர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்த நிலையில், மேலும் 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவும், காவல் பார்வையாளராக மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.