Breaking | தியாகாராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் நிகழும் மிகவும் முக்கியமான செய்திகளை பிரேக்கிங் செய்திகளாக உடனுக்கு
LIVE
Background
பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜ பாகவதரின் மகன் வழிப்பேரன் சாய்ராம் வீடின்றி சிரமமான சூழலில் வசிப்பதை அறிந்து உதவி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தியாகாராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜ பாகவதரின் மகன் வழிப்பேரன் சாய்ராம் வீடின்றி சிரமமான சூழலில் வசிப்பதை அறிந்து உதவி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரூ.3 லட்சம் கோடியில் புதிய மின் திட்டங்களுக்கு அனுமதி
பொதுமக்கள் மின் கட்டணத்தை சிரமமின்றி செலுத்த ரீசார்ஜ் முறை கொண்டு வரவும், ரூ.3.03 லட்சம் கோடியில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், புதிய மின்பாதை அமைத்தல், துணை மின் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
கேல் ரத்னா விருதுகள் அஷ்வின், மித்தாலி ராஜ் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ
புதுச்சேரியில் ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றார் சைலேந்திரபாபு
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றார் சைலேந்திரபாபு