TN Assembly Session 2022 LIVE: ஜனவரி 7-ஆம் தேதி வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
TN Assembly Session 2022 LIVE Updates: தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் ஆளுநர் உரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE
Background
TN Assembly Session 2022 LIVE Updates:
சென்னை கலைவானர் அரங்கில், இன்று காலை 10 மணி முதல் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. முதல் கூட்டம் என்பதால் முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு, சட்டப்பேரவை நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருவார். அவரை சட்டப்பேரவையின் சபாநாயகரான அப்பாவு, வரவேற்று பேரவைக்குள் அழைத்து செல்வார்.
ஆளுநர் உரையில், சித்திரை 1ஆம் தேதிக்கு பதிலாக, மீண்டும் தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், சென்னையில் மழை காலத்தின்போது தண்ணீர் தேங்குவதை தடுக்க, நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்றது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் ஆளுநர் உரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஆட்சி அமைந்ததும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு, தற்போது ஏற்பட்டுவரும் ஒமைக்கிரான் பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் பேசவுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரை முடிந்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரை கொண்ட அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால், கடந்த கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றதால் அதனை செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, " சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தமிழக சட்டப்பேரவை நேரலை..
#BREAKING
தமிழக சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது..!
நேரலை லிங்க் :
https://www.youtube.com/watch?v=xCZxeYXFhHo
#TNAssembly2022 | #TNAssembly
ஜனவரி 7-ஆம் தேதி வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
ஜனவரி 7-ஆம் தேதி வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு - ஆளுநர்
நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்ற ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது என்றும் தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்: பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது
பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
இருமொழிக் கொள்கை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது - ஆளுநர் சிறப்புரை
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது - ஆளுநர் சிறப்புரை