TN Assembly Centenary Celebrations LIVE : கலைஞர் மு.கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன் - ராம்நாத் கோவிந்த்
தமிழ்நாட்டில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தொடர்பான உடனடி செய்திகளை லைவ் பிளாக் மூலம் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக குடியரசுத் தலைவர் இன்னும் சற்றுமுன் சென்னை வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.
Early Writing System: A journey from Graffiti to Brahmi புத்தகம் வழங்கினார்
சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு அளித்த புத்தகம் Early Writing System: A journey from Graffiti to Brahmi. தமிழின் ஆரம்பகால எழுத்து வளர்ச்சி பற்றிய விரிவான ஆய்வு நூலாக பார்க்கப்படுகிறது.
பாரதியார் பாடலை மேற்கொள் காட்டி விழாவில் குடியரசுத் தலைவர் பேச்சு
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்
என்ற பாரதியார் பாடலை மேற்கொள் காட்டி விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
கலைஞர் மு.கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன் - ராம்நாத் கோவிந்த்
இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பேசினார்.
TN Assembly Centenary Celebrations LIVE : தமிழ்நாடு ஆளுநர் பெருமிதம்
ஆளுநர் பெருமிதம்: பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தொழிலாளர் நலன்களுக்கு பல்வேறு நல வாரியங்கள், இலவச தொலைக்காட்சி,சாதி ஒழிப்புக்கு சமத்துவபுரம்- எல்லாம் அருமையான திட்டங்கள்.... மற்ற மாநிலங்கள் இதனை பின்பற்ற வேண்டும்.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது - கலைஞர் திருவுருவ படம்
கலைஞர் கருணாநிதி படத்திற்கு கீழ் 'காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது