Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் இன்று 35,873 நபர்களுக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 35 ஆயிரத்து 873 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 873 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 6 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆயிரத்து 559 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 671 ஆக பதிவாகியுள்ளது.



Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் இன்று 35,873 நபர்களுக்கு கொரோனா!


மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 74 ஆயிரத்து 61 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 7 லட்சத்து 32 ஆயிரத்து 762 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 19 ஆயிரத்து 895 நபர்களும், பெண்கள் 15 ஆயிரத்து 978 நபர்களும் அடங்குவர்.


மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைந்து இன்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 776 ஆகும். இதனால், மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 2 ஆயிரத்து 537 நபர்கள் ஆவார்கள்.



Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் இன்று 35,873 நபர்களுக்கு கொரோனா!


கொரோனா வைரசினால் நேற்று 467 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று கொரோனா தொற்றினால் தமிழ்நாடு முழுவதும் 448 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 169 பேர் தனியார் மருத்துவமனையிலும், 279 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 86 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 6 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 125 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.



Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் இன்று 35,873 நபர்களுக்கு கொரோனா!


தமிழகத்தில் கொரோனா பரவலின் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் சென்ற நிலையில், இன்று ஆறுதல் அளிக்கும் விதமாக சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. புதியதாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி விதிக்கப்பட்டுள்ளதால், மனிதர்கள் வெளியில் நடமாடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கும் என்றும், இதனால் கொரோனா பரவலை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று சுகாதாரத்துறையினரும், ஆய்வாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

Tags: Tamilnadu covid 19 death new cases coronavirus

தொடர்புடைய செய்திகள்

தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்... கொலை வழக்கான வழிப்பறி புகார் - சிக்கிய இளைஞர்!

தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்... கொலை வழக்கான வழிப்பறி புகார் - சிக்கிய இளைஞர்!

ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

Tamil Nadu NEET 2021 : நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும்? - விளக்கம் அளித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

Tamil Nadu NEET 2021 : நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும்? - விளக்கம் அளித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

Children authors : தொடங்கப்பட்டது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்!

Children authors : தொடங்கப்பட்டது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்!

TN Politics: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஒபிஎஸ், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

TN Politics: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஒபிஎஸ், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 94 சதவீதமாக உயர்வு

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 94 சதவீதமாக உயர்வு

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்