கரூரில் தமிழ், மலையாள மக்கள் பங்கேற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கரூரில் கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம். தமிழர் மற்றும் மலையாள மக்கள் பங்கேற்பு. குழந்தைகளின் நடனம், பாடல்கள், பேஷன் ஷோ அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கேரள சமாஜம் அமைப்பில் சார்பில் இரண்டாம் ஆண்டாக கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓணம் பண்டிகை பெருவிழா கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் கனிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்டத்தில் கேரள சமாஜம் அமைப்பில் சார்பில் இரண்டாம் ஆண்டாக கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓணம் பண்டிகை பெருவிழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக தமிழ் மற்றும் கேரள மக்களை வரவேற்கும் வகையில் அத்தப்பூ கோலமிட்டு,சேண்டை மேளம் முழக்க வரவேற்பு அளித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாள மற்றும் தமிழ் மக்கள் பங்கேற்ற இந்த ஓணம் கொண்டாட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஓணம் பாடல், சினிமா பாடல்கள் நடனமாடினர், தொடர்ந்து வந்த குழந்தைகள் கலாச்சார உடை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து ஓணம் பண்டிகையின் போது வழங்கப்படும் சதையா விருந்து அளிக்கப்பட்டது. அப்போது மாபலி வேடத்தில் வந்த ராஜா குழந்தைகளுக்கு பெரியோர்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கினர். கரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக கேரள மக்கள் ஒன்று கூடி, அவர்களின் நண்பர்களான தமிழக மக்களயும் அழைப்பு விடுத்து ஓனம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தனர்.