மேலும் அறிய

Annamalai Release Video: டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை வெட்டி ஒட்டவில்லை - அண்ணாமலை

எடிட் செய்யாத வீடியோவை மாநில தேர்தல் ஆணையத்திடம் கொடுப்போம் - அண்ணாமலை

கோயில்களை இடித்தது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாக பாஜக மாநில தலைவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

அதற்கு, கோயில்களை இடிக்க நேர்ந்தது பற்றி பேசியதை வெட்டியும், ஒட்டியும் திரித்தும் பகிர்ந்துள்ள அண்ணாமலை, கோயில் கட்டிக் கொடுத்துள்ளதாகப் பேசியதை திட்டமிட்டே மறைத்துள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை வெட்டி ஒட்டவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நாளை எடிட் செய்யாத முழு வீடியோவை மாநில தேர்தல் ஆணையத்திடம் பாஜக தலைவர்கள் கொடுக்கவுள்ளனர் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

டி.கே.எஸ் இளங்கோவன் அறிக்கை:

அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பாக டி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”பொதுவாக மக்களுக்கு பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாதம் 27ஆம் தேதி மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய கழகப் பொருளாளர், சாலை விரிவாக்கப் பணிகளின்போது இயல்பாக ஏற்படும் சில இடர்பாடுகளையும், அவற்றைக் கடந்து மக்கள் நலன் கருதி அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் சில கடந்தகால நிகழ்வுகளைச் சான்றாகக் கூறிப் பேசியுள்ளார்.

பேச்சை ஒட்டி திரித்து பகிர்ந்துள்ளார்

அதில், அவர் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்தக் கோயில்களுக்குப் பதிலாக, இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும், அதுவும் கூடுதல் வசதிகளுடன் அவரே மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது பற்றியும் சுட்டிக்காட்டி - வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், அந்தக் காணொளியில், அவர் மூன்று கோயில்களைத் தவிர்க்க முடியாமல் இடிக்க நேர்ந்தது பற்றிக் கூறியதை மட்டும், வெட்டியும், ஒட்டியும் திரித்தும் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள  அண்ணாமலை, அதன் தொடர்ச்சியாக அவர் கோயில்களை கட்டிக் கொடுத்துள்ளதாகப் பேசியதைத் திட்டமிட்டே உள்நோக்கத்துடன் “எடிட்” செய்து மறைத்துள்ளார்.

பத்திரிகைகள் படிப்பதில்லை'

தி.மு.க. பொருளாளர்  “சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்ட அந்த மூன்று கோயில்களையும், மீண்டும் நூறு, இருநூறு பேர் அமர்ந்து சாப்பிடும் மண்டபம் உள்ளிட்ட வசதியுடன் சிறப்பாகக் கட்டிக் கொடுத்தோம். இதுபோல பல இடங்களில் மதநம்பிக்கை உள்ளவர்களை சமாதானப்படுத்தித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்” என்று அந்த உரையில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்துவிட்டு அரைவேக்காட்டு அரசியல் நடத்த வந்த அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் திரு. டி.ஆர். பாலு பேசிய வீடியோவின் முன் பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டுள்ளார். இன்னும் சொல்லப் போனால், அவர் அந்தக் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் பற்றிக் குறிப்பிட்ட உரையின் முழுமையான பேச்சு அடங்கிய செய்தியை, “தி பிரிண்ட்” இணையதளத்தில் முழுமையாக வெளியிட்டுள்ளனர். ஆனால், அண்ணாமலை பத்திரிகைகளையும் படிப்பதில்லை.

கட் அண்ட் பேஸ்ட்

அது போன்ற இணையதளங்களில் உள்ள முழுப் பேச்சினையும் படிப்பதில்லை. பாவம் அவருக்குப் படிக்கத் தெரியவும் இல்லை. முழு வீடியோவைப் பார்க்கவும் தெரியவில்லை. ஆனால் கீழ்த்தரமான அரசியல் செய்வதற்காக ஒரு பேச்சை வெட்டி வெளியிட மட்டுமே தெரிந்திருக்கிறது. இனி அவரை “கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை” என்றே அழைக்க வேண்டும் போலிருக்கிறது. மதவெறி துவேஷத்தைக் கிளப்ப வெட்டி ஒட்டி விஷத்தைக் கக்கியிருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு உருவாகியிருக்கும் ஒரு கேடு என்பதை இதுபோன்ற தனது அறமற்ற செயல்களால் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலையில் பாணியில் நான் கூறுவது என்றால், பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது, 2008 -ஆம் ஆண்டு குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே, அந்த நடவடிக்கைக்காக இன்றைய பிரதமரும், அன்றைய குஜராத் முதலமைச்சருமான மோடி அவர்களை இந்துக்களுக்கு விரோதி எனக் கூறினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா?

ஆக்கிரமிப்புகளை அகற்றிய மோடி

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகக் கோயில்களை இடிக்கும் பணியை குஜராத்தின் அன்றைய மோடி தலைமையிலான அரசு, ஒரு தீபாவளி தினத்தின் இரவில் தொடங்கியதை அண்ணாமலை அறிவாரா? “இந்துத்துவாவின் “போஸ்டர் பாய்” என்று மோடியை அழைக்கும் முன்னர், குஜராத் தலைநகர் காந்தி நகரில், ஒரே மாதத்தில் 80 கோயில்களின் ஆக்கிரமிப்பை அவர் அகற்றியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்ற முகவுரையுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு அப்போது தலைப்புச் செய்தி வெளியிட்டதே, அதுவாவது அண்ணாமலைக்குத் தெரியுமா?

வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை'

வளர்ச்சிப் பணிகளுக்காகச் சட்டவிரோதமாகச் சாலைகளை, பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டியிருக்கும் வழிபாட்டுத் தலங்களை அகற்றுவதும், அதற்கு மாற்றாக அருகே கட்டிக் கொடுப்பதும் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஒன்றுதான். அது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் கனவான சேதுசமுத்திரத் திட்டம் போன்ற மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடனும், ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டைகளை எப்படி சரி செய்வது என்பதையும் உணர்த்தவே அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கிடைத்த தனது அனுபவத்தை அந்த மேடையில் முன்னால் ஒன்றிய அமைச்சர்  டி.ஆர். பாலு அவர்கள் பேசியிருந்தார். ஆனால், அதையே அண்ணாமலை விஷமத்தனத்துடன் திரித்து வெளியிட்டு, அதன் மூலம் அற்ப மகிழ்ச்சியை அடைந்துள்ளார்.

 முதலமைச்சரின் தலைமையிலான கழக அரசில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்படுகிறது. திருக்கோயில் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடந்துவிட்டது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அண்ணாமலை இப்படி வெட்டியும், ஒட்டியும், திரித்தும் தரம்தாழ்ந்த செயலில் ஈடுபடுவது மகா கேவலமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இழிவுபடுத்தி - மாநிலத்தில் அமைதியைக் கெடுக்கவும் - முன்னேற்றத்தைத் தடுக்கவும் முயற்சி செய்யும் அண்ணாமலை இது போன்ற மலிவான செயல்களை நிறுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை மறுப்பு:

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் டி.ஆர்.பாலு பேசியவற்றை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார், நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எடிட் செய்து வெளியிட்டதாக எ.வ.வேலு சொல்லியுள்ளார். அவர் சொல்லும் இடத்தில் வீடியோவை தரத் தயார் அதனை முதலமைச்சர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget