மேலும் அறிய

Summer Special Trains: தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூருக்கு கோடை சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது.? தெற்கு ரயில்வே அறிவிப்பு

Summer Special Train 2026 Tamilnadu: கோடை விடுமுறையையொட்டி அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை- சிறப்பு ரயில்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்கும் செல்ல தொடங்கியுள்ளனர். அதே நேரம் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளதால் சிறப்பு ரயில் அறிவிக்கப்படுமா.? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, போதனூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

எழும்பூர்- கன்னியாகுமரி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 ஏப்ரல் 2026 ) இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் மதியம் 1.00 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் மே 3 ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் எழும்பூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை,நாகர்கோவில்  வழியாக கன்னியாகுமரி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்- தென்காசி சிறப்பு ரயில்

தாம்பரம் – தென்காசி/செங்கோட்டை இடையே (ரயில் 06089/06090) எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில்களும் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (30 ஏப்ரல் 2026) இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 10.00 மணிக்கு தென்காசியை சென்றடையும் எனவும் மறுமார்க்கத்தில் மே 3ஆம் தேதி அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை,ராஜபாளையம் வழியாக தென்காசியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.  

ஈரோடு – சென்னை சென்ட்ரல் – போதனூர்

 ஈரோடு – சென்னை சென்ட்ரல் – போதனூர் இடையே சிறப்பு ரயில்கள் (ரயில் எண் 06026/06025) இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.20 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில், மாலை 5.00 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். அதே நாளில் மாலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 5.15 மணிக்கு போதனூரை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், போதனூர் – சென்னை சென்ட்ரல் இடையே (ரயில் எண் 06028/06027) சிறப்பு ரயில்கள் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருப்பதாகவும், அதில்  போதனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் ரயில், அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் மாலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு போதனூரை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு ரயில் போதனூர்,திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. 

முன்பதிவு எப்போது தொடங்கும்.?

இந்த அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 06026/06025 ரயில்களுக்கு முன்பதிவு நேற்றைய தினம் தொடங்கியுள்ளது. மற்ற ரயில்களுக்கு முன்பதிவு 30 ஏப்ரல் காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

Embed widget