மேலும் அறிய

கோவையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை

காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரனுக்கு நட்பு இருந்து வந்துள்ளதை கண்டித்ததால் மனம் உடைந்த ஸ்வேதா தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டயம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான கோச்சிங் சென்டர் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவர் இருந்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்வேதா (18) என்பவர் சேர்ந்து, பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் திருச்சியை சேர்ந்த பிரியங்கா மற்றும் கரூரை சேர்ந்த காவ்யா ஆகியோர் ஒரே அறையில் தங்கி படித்து வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் மதுரையை சேர்ந்த யோகேஸ்வரன் (18) என்பவரும் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரன் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர்கள் பழகி வருவது தெரிந்து ஸ்வேதா மற்றும் யோகேஸ்வரன் இருவரையும் பெற்றோர்கள் பேசக்கூடாது என கண்டித்துள்ளனர். 

அதன் பின்பு யோகேஸ்வரனை கடந்த ஜனவரி மாதத்தில் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று படிக்க வேண்டாம் என அவரது பெற்றோர் நிறுத்தி சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை முதல் ஸ்வேதா உடல் நிலை சரியில்லாமல் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பிரியங்கா, காவ்யா ஆகிய இருவரும் நீட் வகுப்பிற்கு சென்றுள்ளனர். பின்பு வகுப்பு முடிந்து பிரியங்கா  ஸ்வேதாவிற்கு மெஸ்ஸில் இருந்து உணவு வாங்கி வந்து பார்த்த போது, அறை உட் பக்கமாக பூட்டி இருந்துள்ளது. பின்னர் திரும்பி ஜன்னல் வழியில் பார்த்த பொழுது ஸ்வேதா தனக்குத் தானே மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் பிரியங்கா வார்டனுக்கு தகவல் சொல்லி அவர்கள் மூலம் கதவை உடைத்து, ஸ்வேதாவை மீட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்வேதா மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரனுக்கு பழக்கம் இருந்து வந்துள்ளதை கண்டித்ததால் மனம் உடைந்த ஸ்வேதா தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்வேதாவின் உடலை காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK vs AIADMK: ”ஒண்டிக்கொண்டி பாத்துக்கலாம்” திமுக Vs அதிமுக - நேரெதிரே மோதும் 121 தொகுதிகள், வேட்பாளர்கள்
DMK vs AIADMK: ”ஒண்டிக்கொண்டி பாத்துக்கலாம்” திமுக Vs அதிமுக - நேரெதிரே மோதும் 121 தொகுதிகள், வேட்பாளர்கள்
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
தாம்பரத்தில் திமுக உட்கட்சி மோதல்: டி.ஆர். பாலு இல்லம் முற்றுகை! வேட்பாளர் மாற்றம் கோரி தொண்டர்கள் கொந்தளிப்பு!
தாம்பரத்தில் திமுக உட்கட்சி மோதல்: டி.ஆர். பாலு இல்லம் முற்றுகை! வேட்பாளர் மாற்றம் கோரி தொண்டர்கள் கொந்தளிப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election: முதல் நாளே ஸ்டாலின், விஜய் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - 234 தொகுதிகளிலும் நாதக ப்ளான்
TN Election: முதல் நாளே ஸ்டாலின், விஜய் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - 234 தொகுதிகளிலும் நாதக ப்ளான்
DMK vs AIADMK: ”ஒண்டிக்கொண்டி பாத்துக்கலாம்” திமுக Vs அதிமுக - நேரெதிரே மோதும் 121 தொகுதிகள், வேட்பாளர்கள்
DMK vs AIADMK: ”ஒண்டிக்கொண்டி பாத்துக்கலாம்” திமுக Vs அதிமுக - நேரெதிரே மோதும் 121 தொகுதிகள், வேட்பாளர்கள்
TVK R.S.Murugan: காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு தவெகவில் சீட்டு.. யார் இந்த ஆர்.எஸ்.முருகன்?
TVK R.S.Murugan: காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு தவெகவில் சீட்டு.. யார் இந்த ஆர்.எஸ்.முருகன்?
CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே - ராஜஸ்தானின் இளம்படையை சமாளிக்குமா? சஞ்சு Vs ஜடேஜா - வெற்றி யாருக்கு?
CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே - ராஜஸ்தானின் இளம்படையை சமாளிக்குமா? சஞ்சு Vs ஜடேஜா - வெற்றி யாருக்கு?
Trump Iran War: ”நான் செத்துட்டேனா” மொஜ்தாபா சர்ப்ரைஸ், அடித்து விட்டாரா ட்ரம்ப்? - ஈரான் போர் நிலவரம் என்ன?
Trump Iran War: ”நான் செத்துட்டேனா” மொஜ்தாபா சர்ப்ரைஸ், அடித்து விட்டாரா ட்ரம்ப்? - ஈரான் போர் நிலவரம் என்ன?
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
IPL 2026 MI vs KKR: ரோகித், ரிக்கெல்டன் காட்டடி.. கொல்கத்தாவை கொளுத்தி மும்பை வெற்றி!
IPL 2026 MI vs KKR: ரோகித், ரிக்கெல்டன் காட்டடி.. கொல்கத்தாவை கொளுத்தி மும்பை வெற்றி!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
Embed widget