மேலும் அறிய

மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தீவிரமடையும் பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, பாஜக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாக வேட்பாளர்கள் வீதி வீதியாக வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த ஸ்டாலின்

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தினந்தோறும் அந்த அந்த மாவடங்களில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அந்த தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து வரும் ஸ்டாலின், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என வாக்குறுதிகளை அளித்து வருகிறார். மேலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூறியும் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

மெட்ரோ ரயிலில் ஸ்டாலின்

இந்த நிலையில் இன்று தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில்,  காலை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணம் செய்தார்.  அப்போது  மு.க. ஸ்டாலின் ரயில் பயணிகளிடம் வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மெட்ரோ ரயில் நிலைய கவுண்டரில் டிக்கெட்டை பெற்றுக்கொண்ட ஸ்டாலின்,  மெட்ரோ ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார். அப்போது  ஸ்டாலின் ரயில் பயணிகளிடம் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.

செல்பி எடுத்தும் மகிழ்ச்சி

முதலமைச்சர் ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை பார்த்த ரயில் பயணிகள் கை கொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், Morning ride in Chennai Metro: சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Embed widget