மேலும் அறிய
Advertisement
சட்டவிரோதமாக இந்தியா வந்த இலங்கை தம்பதி - ஜன.7 வரை நாடு கடத்த தடை
’’இலங்கைக்கு எங்களை அனுப்பினால் அங்குள்ள அரசியல் மோதலால் நாங்கள் பழிவாங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது’’
இலங்கையைச் சேர்ந்த கணவன், மனைவி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் இலங்கையில் ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள். அந்த அரசியல் கட்சிக்கும் இன்னொரு அரசியல் கட்சிக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலால் எங்களை நாட்டை விட்டு ஓடிவிடுமாறு மிரட்டினர். இதனால் குழந்தைகளுடன் படகில் தனுஷ்கோடி வந்தோம். அங்கிருந்து டில்லி சென்றோம். சுவிட்சர்லாந்து செல்வதற்காக டில்லியில் உள்ள வெளிநாடு மண்டல பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். அப்போது சென்னை போலீஸில் தடையில்லா சான்று பெற்று வருமாறு கூறப்பட்டது.
போலீஸார் விசாரணை நடத்தி நாங்கள் சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக கூறி எங்களை கைது செய்தனர். வழக்கில் ஜாமீன் பெற்றோம். திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். எங்கள் குழந்தைகள் இந்தியாவிலுள்ள உறவினர்களிடம் உள்ளனர். நாங்கள் நிரந்தரமாக திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படலாம் அல்லது இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என அஞ்சுகிறோம். இலங்கைக்கு எங்களை அனுப்பினால் அங்குள்ள அரசியல் மோதலால் நாங்கள் பழிவாங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
எனவே எங்களை நாடு கடத்த தடை விதித்து, சுவிட்சர்லாந்து செல்வதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர்களின் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஜனவரி 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை மனுதாரர்களையும், குழந்தைகளையும் நாடு கடத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியின் போது, மேஜை விழுந்து கால் விரல் துண்டான மாணவனுக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.
மதுரை கீழ உறப்பனூரைச் சேர்ந்த ஆதிசிவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் என் மகன் சிவநிதி. திருமங்கலம் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2015ஆம் ஆண்டு ல் 8ஆம் வகுப்பு சி படித்து வந்தார். கடந்த 24.6.2015ஆம் ஆண்டில் வகுப்பாசிரியர் மாணவர்களை வகுப்பறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார். அப்போது மேஜை விழுந்து சிவநிதியில் இடது கால் பெரு விரலுக்கு பக்கத்து விரல் துண்டானது. என் மகன் ராணுவத்தில் சேர விரும்பினார். கால் விரல் துண்டானதால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது. உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், "தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. பள்ளி நிர்வாகத்தின் மெத்தனத்தால் மனுதாரின் மகனின் காலில் ஒரு விரல் துண்டாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு அரசு 4 வாரத்தில் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என உத்தரவில் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion