இந்த வீக் எண்ட் நோ டென்ஷன்! திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்.. ஹாயா போய் இறங்கலாம்
உள்ளூர் மக்களின் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஜூன் 21ஆம் தேதி அன்று சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி அன்று (சனிக்கிழமை), சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55க்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45க்கு நெல்லை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீக் எண்ட் நோ டென்ஷன்!
அதேபோல, வரும் ஜூன் 22ஆம் தேதி அன்று (ஞாயிறு), நெல்லையில் இரவு 9.40க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 8.15க்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூன்.18) தொடங்கும் என தகவல் கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருநெல்வேலி இடையே தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அது உள்ளூர் மக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை விருத்தாசலம், மதுரை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வழியே தினசரி ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்:
சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவசர நேரத்தில் செல்லும் பயணிகள் தட்கல் முறையில் முன்பதிவு செய்யும்போது 30 நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக, வார இறுதி நாள்களிலும் பண்டிகை காலத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உள்ளூர் மக்களின் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஜூன் 21ஆம் தேதி அன்று சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹாயா போய் இறங்கலாம்
இரவு 9.55 மணிக்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு நெல்லை சென்றடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வரும் ஜூன் 22ஆம் தேதி (ஞாயிறு), நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 8.15க்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூன்.18) தொடங்கும் என தகவல் கூறப்பட்டுள்ளது.





















