Pongal Special Trains : தென் மாவட்ட மக்களே.. பொங்கலுக்கு ஊருக்கு போகனுமா! சிறப்பு ரயில்களை இறக்கிய தெற்கு ரயில்வே.. முழு விவரம்
Pongal Special Trains: தெற்கு ரயில்வேயின் சார்பில் பொங்கல் பண்டிக்கைகான சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து 4 சிறப்பு ரயிலகள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை:
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது, இதற்காக வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பர். இதற்காகவே பண்டிகை சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் மக்களின் வசதிக்காக இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்:
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வேயானது அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
- ரயில் எண். 06190 திருச்சிராப்பள்ளி - தாம்பரம் ஜன் சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 04, 05, 10, 11, 12, 13, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 05.35 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
- மறுமார்க்கத்தில் ரயில் எண். 06191, தாம்பரம்-திருச்சிராப்பள்ளி ஜனசதாப்தி ரயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 04, 05, 10, 11, 12, 13, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 03.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிராப்பள்ளி இரவு 11.35 மணிக்கு சென்றடையும்.
🚆Pongal Festival Special Trains✨
— Southern Railway (@GMSRailway) January 3, 2025
To accommodate the extra rush of passengers during the #Pongal2025 special train, Train No. 06190/06191 Jan Shatabdi Superfast Specials, will operate between #Tiruchchirappalli & #Tambaram
Advance Reservation are open from #SouthernRailway end pic.twitter.com/FbeYRU1rqn
நாகர்கோவில் சிறப்பு ரயில்:
- வண்டி எண். 06089 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விழா சிறப்பு ரயில், ர் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 13.00 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
- மறு மார்க்கத்தில் வண்டி எண். 06090 நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர விழா சிறப்பு ரயில், ஜனவரி 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 07.00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 09.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
- இந்த ரயிலானது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், கோவில்பட்டி, திருநெல்வெலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Special trains will be operated between Dr MGR #Chennai Central – #Nagercoil – Dr MGR Chennai Central to clear extra rush of passengers during Pongal Festival
— Southern Railway (@GMSRailway) January 3, 2025
Advance Reservation for the above Special Trains will open at 08.00 hrs on 05.01.2025 (Sunday)#SouthernRailway pic.twitter.com/CRTooaw09B
திருநெல்வெலி சிறப்பு ரயில்:
- வண்டி எண். 06092 திருநெல்வேலி தாம்பரம் வாராந்திர விழா சிறப்பு ரயில் ஜனவரி 12, 19 மற்றும் 26(ஞாயிற்றுக்கிழமைகளில்) திருநெல்வேலில் இருந்து 15.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்
- மறு திசையில் வண்டி எண். 06091 தாம்பரம்-திருநெல்வேலி வாராந்திர விழா சிறப்பு ரயில் ஜனவரி 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து 15.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 04.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜப்பாளையம், சங்கரன்கோவில்,கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ்க்கடையம்,அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
#Pongal Festival Special Trains! ✨🚂
— Southern Railway (@GMSRailway) January 3, 2025
To handle the festive rush, special weekly trains are running between #Tirunelveli and #Tambaram (Train No. 06092/06091).
Advance Reservation opens at 08:00 AM on 05.01.2025 (Sunday).
Book your tickets now.#SouthernRailway pic.twitter.com/ABUUPXk55Q
ராமநாதபுரம் சிறப்பு ரயில்:
- வண்டி எண். 06104 ராமநாதபுரம் தாம்பரம் வாராந்திர விழா சிறப்பு ரயில் ஜனவரி 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) மாலை 03.30 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
- மறுமார்க்கத்தில் வண்டி எண். 06103 தாம்பரம் ராமநாதபுரம் வாராந்திர விழா சிறப்பு ரயில் ஜனவரி 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) மாலை 05.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 05.15 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
- இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி,மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்ப்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Special trains will be operated between Ramanathapuram – #Tambaram – Ramanathapuram Bi- Weekly to clear extra rush of passengers during Pongal Festival
— Southern Railway (@GMSRailway) January 3, 2025
Advance Reservation for the above Special Trains will open at 08.00 hrs on 05.01.2025 (Sunday) #SouthernRailway pic.twitter.com/23FXGuvcgz
கன்னியாகுமரி சிறப்பு ரயில்:
- வண்டி எண். 06093 தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஜனவரி 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு பிற்பகல் 12.30 மணிக்கு சென்றடையும்.
- மறுமார்க்கத்தில் வண்டி எண்.06094 கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் ஜனவரி 14, 2025 அன்று (செவ்வாய்கிழமை) மாலை 03.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
- இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி,மயிலாடுதுறை, கும்பக்கோணம், தஞ்சாவூர், திருச்சிரப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர்,கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர்,நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Festival Special Trains: #Tambaram – #Kanniyakumari ✨
— Southern Railway (@GMSRailway) January 3, 2025
Special trains (Train No. 06093/06094) for festive travelers!
Booking opens at 08:00 AM on 05.01.2025 (Sunday).
Book now and enjoy the celebrations hassle-free!#FestivalSpecialTrains #SouthernRailway pic.twitter.com/qg3guaUgFk
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை ( ஜனவரி 5) தொடங்கும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.