தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானதா?
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் உடனடியாக எனர்ஜி தரக்கூடியது. அப்படி, தினமும் ஆரஞ்சு பழங்கள் அல்லது ஜூஸ் குடிப்பது நன்மையா?
ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவும்.
வைட்டமின் சி ஃபிரி ராடிகல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் சருமன் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சருமம் ரேடியண்டாக இளமையாக இருக்க உதவுகிறது.
ஆர்ஞ்சு பழம் வைட்டமின் சி நிறைந்தது மட்டும் அல்ல. கால்சியம் சத்தும் அதில் உள்ளது. இது எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஆரஞ்சு பழத்தில் hesperidin அதிகம் இருக்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். உடலில் கெட்ட கொழுப்பு சேராமால் இருக்க உதவும்.
ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடிப்பது நல்லதா என்று கேட்டால் நிபுணர்கள் சொல்லும் பதில்.. ‘நோ’.
அடிக்கடி இல்லாமல், வாரத்தில் இரண்டு முறை என ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். ஆரஞ்சு பழமாக சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.