மேலும் அறிய

கரூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ - ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி

இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கியம்.

கரூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 87 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கியம்.

கரூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ - ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கரூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ - ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி

தற்போது, உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது. மேலும், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கிச் சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன.  

கரூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ - ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி

மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன், பருத்தி சட்டைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளருக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். இதில் ரூபாய் 50 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Breaking News LIVE: உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Breaking News LIVE: உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget