மேலும் அறிய

Pattimandram Raja: ராஜா சாதி பற்றி கேட்பாரா? - சாலமன் பாப்பையா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அட்லாண்டா பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற போது அங்கு சமைத்து உணவு பரிமாறிய பெண்ணிடம் என்ன சாதி என கேட்டதாக சர்ச்சை வெடித்தது.

உணவு சமைத்த பெண்ணிடம் சாதி பற்றி விசாரித்ததாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மீது புகார் எழுந்த நிலையில் அவருக்கு சாலமன் பாப்பையா ஆதரவு தெரிவித்துள்ளார். 

சர்ச்சையான பதிவு

சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில் பதிவு ஒன்று வைரலானது. அதில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அவர் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் அட்லாண்டா பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்றிருந்தார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவை சமைத்த நபர்களிடம், ஊர் பெயரை கேட்டுவிட்டு சாதியைப் பற்றி கேட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பதிவை பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணின் சகோதரர் பதிவிட்டிருந்தார். அதில் என்னுடைய தங்கை காரைக்குடி என ராஜாவிடம் சொன்ன நிலையில், அவர் நீங்க செட்டியாரா என கேட்டார். ஆனால் அதனை தவிர்க்க என் தங்கை அமைதியாக இருந்த நிலையுல் மீண்டும் மீண்டும் என்ன ஆளுங்க என கேட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும்.

பட்டிமன்றத்தில் உங்களின் பேச்சை ரசித்து கேட்ட என் தங்கை உங்களுக்காக ஆசையாக சமைத்து எடுத்துக் கொண்டு வந்தார். இனியாவது சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம். காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா? அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து சங்கம் நடத்தினால் அங்கேயும் வந்து சாதி வன்மத்தை காட்டுவீர்களா? என சரமாரியாக விமர்சித்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.  

ராஜா கொடுத்த விளக்கம்

இந்த நிலையில், “காரைக்குடி என அந்த பெண் சொன்னதும் நான் செட்டிநாடா என்று தான் கேட்டேன். அவரை செட்டியாரா என நாம் கேட்கவில்லை. ஒருவர் என்ன சமூகம் என்பதை யோசிக்கும் அளவுக்கு சின்ன புத்தி எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் எத்தனையோ பகுதிகளுக்கு சென்று பலரையும் சந்தித்துள்ளோம். யாரையாவது சாதி மற்றும் சமய உணர்வுகளோடு பார்த்திருந்திருப்பேனா?  தமிழன் என்ற ஒன்றைதான் நான் பெருமையாக கருதுகிறேன். உண்மையில் மிகவும் மன வலியுடன் இதை பேசுகிறேன். எந்த காலத்திலும் நான் அப்படி இருந்ததில்லை” என ராஜா வீடியோ மூலம் விளக்கமளித்தார். 

சப்போர்ட் செய்த சாலமன் பாப்பையா

இந்த நிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வெளியிட்டுள்ள வீடியோவில், ”ராஜாவை பற்றி தவறான செய்தி ஊடகத்தில் சென்றதைப் பார்த்தேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ, அறியாமலோ ராஜாவைப் பற்றி தவறான கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அவர் என்னுடன் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கீறார். ராஜா என்னுடைய பிள்ளை. அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற சந்தத்தை தனது சிந்தனையில் ஏற்றுக்கொண்டவர். ராஜாவுக்கு சாதியை கேட்கும் வழக்கம் இருக்காது என்பது நான் சத்தியம் செய்து சொல்கிறேன். நான் அங்கு இல்லை. ஆனால் ராஜாவின் மனதில் அப்படிப்பட்ட உணர்வு துளி கூட இல்லை. அந்த பதிவு மிகப்பெரிய வருத்தம். ஏன் இப்படி தவறான பதிவு வந்தது. இது தமிழர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் நல்லது அல்ல. எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரில் கேட்டிருக்கலாம்.  அவரை திருத்துவதற்கு பதில் பதிவை வெளியிட்டு பகையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget