மேலும் அறிய
சிவகங்கை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ–க்கு மேல் மழை: பல்வேறு பகுதிகளில் தொடரும் சாரல் மழை !
சிவகங்கை மாவட்டம் முழுவதும் நெல் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த மழை விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மழை
Source : twitter
சிவகங்கை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ–க்கு மேல் மழை: பல்வேறு பகுதிகளில் தொடரும் சாரல் மழை.
சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை. வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலாட் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தால் நிலையில் இன்று காலை முதலே சாரல் மழை செய்து வருகிறது. அதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காரைக்குடி திருப்பத்தூர் மானாமதுரை தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழக அரசு தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்த நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மழை
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6.00 மணி முதல் இன்று 29, 2025 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுவதும் தீவிர கனமழை பதிவாகியுள்ளது. மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையின் தகவலின்படி, மொத்தமாக 20.48 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மிதமான சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது
சிவகங்கை மாவட்டத்தில்இளையான்குடி அதிகபட்சமாக – 6.8 செ.மீ மழைபதிவாகியுள்ளது ,மானாமதுரை – 3.1 செ.மீ,தேவகோட்டை – 2.4 செ.மீ காளையார்கோவில் – 2.34 செ.மீ மாவட்டத்தின் மொத்த சராசரி மழையளவு 2.276 செ.மீ என பதிவாகியுள்ளது. இதனுடன், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை மிதமான சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் நனைந்து, போக்குவரத்து மந்தமாக இருந்தாலும் பெரிய சேதம் எதுவும் எற்படவில்லை. இருப்பினும், தொடர்ச்சியான இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நெல் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த மழை விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















