மேலும் அறிய

பெண்களை அக்கா, தங்கச்சியா பாருங்க.. ஆண்களுக்கு அட்வைஸ்.. சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி!

தமிழ்நாடு முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் காவலர்கள் தங்கள் பணியைத் தொடங்கினர். அவர்கள் பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முதலமைச்சர் ஜோசப் விஜயால் தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழ்நாடு முழுவதும் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளது. 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என தவெக அளித்த வாக்குறுதிக்கு கோடிக்கணக்கான பெண்கள் வாக்களித்துள்ளனர். இப்படியான நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்திய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற திட்டத்தை விஜய் அறிவித்தார். இந்த திட்டம் ஜூன் 9ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். 

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் விஜய், “நம் வீட்டில் பாட்டி, அம்மா, அக்கா என ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியமாகும். எக்காரணம் கொண்டு பெண்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டாது.  போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினை கிடையாது. சமூக, தனிமனித ஒழுங்கும் சம்பந்தப்பட்டு உள்ளது" என கூறினார். மேலும் இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்படும். புதிதாக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் காவலர்கள் தங்கள் பணியைத் தொடங்கினர். 

களமிறங்கிய பெண் போலீசார் 

அந்த வகையில், “கோவை பேருந்து நிலையத்தில் பயணிகளிடையே பேசிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடம், பேருந்துகளில் பயணம் செய்யும்போது, பொது இடங்களில் நடக்கும்போது ஏதேனும் தொந்தரவுகளோ, பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை போன்ற பிரச்னைகளோ ஏற்பட்டால் உடனடியாக 100க்கு கால் பண்ண வேண்டும்.  நீங்கள் இருக்கும் இடத்திற்கு உடனடியாக வந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தான் எங்களின் வேலையாகும். 

இந்த திட்டத்தின் நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.1098,181 எண்களுக்கு போன் செய்யலாம். நீங்க எப்போ கூப்பிட்டாலும் உடனடியாக வருவோம். தயக்கம் இல்லாமல் பிரச்னை ஏற்பட்டால் புகார் அளியுங்கள். கல்லூரிகளில் ராகிங் செய்தாலும் சொல்ல வேண்டும். ஆண்களுக்காகவும் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். நீங்கள் உங்கள் கூட பிறந்த அக்கா, தங்கையாக பேருந்தில் பயணிப்பவர்களை நினைக்க வேண்டும். அவர்களை நாம் தவறாக அணுகக்கூடாது. உங்களை நம்பித்தான் பெண்கள் வருகிறார்கள். அதனால் உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்” என தெரிவித்துள்ளனர். 

அதேபோல் திருப்பூரில் பேசிய பெண் காவலர்கள், “ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்கும் பெற்றோர்கள் பெண்களிடம் எப்படி பழக வேண்டும், பேச வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். பசங்க சரியாக இருந்தால் பெண்கள் எப்படி இருந்தாலும் தப்பு நடக்காது. அதேபோல் பெண்களை தொட நினைத்தால் பாதிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் போதையைப் போட்டு சீண்டும் வேலை எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் இருக்கும் சூழல் வரும். அதேசமயம் இதுதான் சாக்கு என பிடிக்காத ஒருவரை மாட்டிவிடக்கூடாது. என்ன புகார் என்றாலும் தைரியமாக சொல்லுங்கள்” என தெரிவித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் பல்டி
நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் பல்டி
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget