மேலும் அறிய

TN Weather Update: அதிதீவிர புயலாக மாறிய மோக்கா..! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? இன்றைய வானிலை நிலவரம்..!

தென்கிழக்கு ஒட்டிய மத்திய வங்கக்கடலில் தீவிர சூறாவளி புயல் "மோக்கா" மத்திய தென்கிழக்கு வங்கக்கடலில் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஒட்டிய மத்திய வங்க கடலில் தீவிர சூறாவளி புயல் "மோக்கா" மத்திய தென்கிழக்கு வங்கக்கடலில் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிதீவிர புயலாக மாறிய மோகா:

தென்கிழக்கு மத்திய வங்கக் கடலில் கடந்த 06 மணி நேரத்தில் 09 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த தீவிர  சூறாவளி புயல் "மோக்கா"  கடந்த 06 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று இன்று காலை 05.30 மணி அளவில் மத்திய தென்கிழக்கு வங்கக்கடலில் அட்சரேகை (longitude) 13.2°N மற்றும் தீர்க்கரேகை (latitude) 88.1°E பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதாவது போர்ட் பிளேயருக்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 520 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு 1010 கிமீ தென்-தென்மேற்கே (வங்காளதேசம்) தொலைவில், சிட்வேவிற்கு (மியான்மர்) 930 கி.மீ.  தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக் கடலில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இது தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) இடையே மே 14 ஆம் தேதி நண்பகல் சிட்வே (மியான்மர்) க்கு அருகில் அதி தீவிர சூறாவளி புயலாகக் கடக்கக்கூடும், புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150- 160 கிமீ வேகத்தில் அவ்வப்போது 175 கிமீ வேகத்தில் காற்று  வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

அந்தமான் கடல் பகுதிகள்:  12.05.2023 :  சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்   வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 மாலை வரை : காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 காலை முதல் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135  கிலோ மீட்டர் வேகத்திலும்,  13.05.2023 காலை முதல் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 155  கிலோ மீட்டர் வேகத்திலும்,  13.05.2023 மாலை முதல் 14.05.2023  காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:  12.05.2023 காலை மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130  கிலோ மீட்டர் வேகத்திலும், 12.05.2023 மாலை மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 145  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 மாலை வரை மணிக்கு 100  முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும்.  அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 13.05.2023 காலை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும், 13.05.2023 மாலை  முதல் 14.05.2023 காலை வரை மணிக்கு 140  முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 13.05.2023 காலை முதல்  14.05.2023 காலை வரை  மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget