Senthil Balaji IT Raid: "மிட்நைட் மசாலா போன்று இரவோடு இரவாக அதிகாரிகள் ரெய்டு" - கொதித்தெழுந்த ஆர்.எஸ் பாரதி
மிட் நைட் மசாலா போன்று இரவு 3 மணிக்கு அதிகாரிகள் வருமானவரித்துறை சோதனைக்கு சென்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மிட் நைட் மசாலா போன்று அதிகாலை 3 மணிக்கு அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வருமானவரித்துறை சோதனைக்கு சென்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
”போர்க்களத்தில் குதிரை படை, காலாட்படை பயன்படுத்துவது போன்று மத்திய பாஜக அரசு IT,ED,CBI போன்ற அமைப்புகளை பயன்படுத்துகின்றனர். கர்நாடக தேர்தலில் பாஜகவினர் 2000 ரூபாய் நோட்டை பயன்படுத்தி தேர்தல் செலவு செய்துள்ளனர். கர்நாடக தேர்தலில் முதல் விக்கெட் வீழ்ந்துள்ளது. 2024 ஆண்டு வெற்றி பெற்று முதல்வர் மேன் ஆப் தி மேட்ச் பெறுவார்.
வருமான வரித்துறை சோதனை பற்றி கவலை இல்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இதை பார்த்து அஞ்சப்பட்டோம். செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார். தமிழகத்திற்கு வரும் முதலீடு செய்திகளை மழுங்கடிக்கும் விதமாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.
கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி 27 கிமீ நடந்து தெருத்தெருவாக ஓட்டு கேட்டார். அனுமன் பெயரை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க நாடகம் நடத்தினார். பதுக்கிய ₹2000 நோட்டுகளை எல்லாம் விநியோகித்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த செய்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது; அதை திசைத்திருப்பவே ரெய்டு நடக்கிறது.
10 நாட்களுக்கு முன் அண்ணாமலையின் சவால்தான் இன்று செந்தில்பாலாஜி சம்மந்த்தப்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் சோதனைக்கு சென்றுள்ளனர். மிட் நைட் மசாலா போன்று அதிகாலை 3 மணிக்கு ரைய்டுக்கு வந்துள்ளனர். காவல்துறையினர் இல்லாததால் வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. வந்தது திருடனா,கொலைகாரனா என்று தெரியாமல் சுய பாதுகாப்புக்காக தாக்கி இருக்கலாம்.
ED மூலம் தொடுக்கப்பட்ட வழக்குகளில் 0.05 வழக்குகள் மட்டுமே உண்மையானவை. அவை மட்டுமே நிரூபிக்க பட்டுள்ளது. திட்டமிட்டு சட்டம் ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர். அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது தவறுதான். வருமானவரித் துறை அதிகாரிகளின் வாகனங்களை தாக்கியவர்கள் திமுகவினராக இருந்தால் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தனது பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் படிக்க