Senthil Balaji Case: செந்தில் பாலாஜி: ஆட்கொணர்வு மனு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!
Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ கடந்த வாரம் 22-ஆம் தேதி வாதிட்டார். இரு தரப்பினருக்கும் இடயே இரண்டு நாட்களாக வாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அமலாக்கத்துறை தரப்பு வாதம் நடைபெற்றது. செந்தில் பாலாஜி தரப்பு வாதமும் நடந்தது. இன்று செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் நேரில் ஆஜரானார்.
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தது. நெஞ்சு வலி காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பைபாஸ் அறுவைச் சிகிச்சையும் நடந்து முடிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்து வழக்கை ஒத்திவைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்தது.வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கோடு, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது அதை, காவலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனி மனுவும் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்படதற்கான காரணம் ஆகியவை தெரிவிக்காததால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என செந்தில் பாலாஜி தரப்பும் வாதிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு, இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக்கூடாது எனக் கோர முடியாது என்று வாதிட்டார். இதற்கு சட்டத்திலும் இடமில்லை. 5 நாள்கள் முடிந்தது என வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்தார். சுமார் 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இரு தரப்பினருக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய அவகாசம் அளித்துள்ளது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.