மேலும் அறிய

EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின், அதிரடி அரசியல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

EVKS Elangovan Passed Away: ஈவிகேஸ் இளங்கோவன் தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை எதிர்த்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்: 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்து காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 10.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 75. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாடு அரசியலின் தவிர்க்க முடியா முகங்களான, கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவையே கடுமையாக எதிர்த்து தீவிரம் அரசியல் களத்தில் நீடித்ததால் ஈவிகேஸ் இளங்கோவன் மக்களிடையே கவனம் ஈர்த்தார்.

சிவாஜி கணேசனுடன் பயணித்த ஈவிகேஎஸ்

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் சிவாஜி கணேசன் பிரிவின் சார்பில் சத்யமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, முதல்முறையாக சட்டமன்றத்திற்கு ஈவிகேஸ் இளங்கோவன் தேர்வானார்.  எம். ஜி. ஆர் மரணத்திற்கு பிறகு முதலமைச்சரான அவரது மனைவி ஜானகிக்கு, தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தி ஆதரவளிக்க மறுத்தார். இதையடுத்து ஜானகிக்கு ஆதரவாக சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய போது, ஈவிகேஎஸ் இளங்கோவனும் கட்சியில் இருந்து வெளியேறினார்.

மீண்டும் தாய்க்கழகத்தில் ஈவிகேஸ்

1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகியின் அதிமுக அணிக்கு ஆதரவாக சிவாஜி கணேசன் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சியின் சார்பில் ஈரோடு பவானி தொகுதியில் போட்டியிட்டு இளங்கோவன் தோல்வியடைந்தார். இதன் பிறகு  சிவாஜி தனது கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைக்க, இளங்கோவன் தனது தாய் கட்சியான காங்கிரசில் இணைந்தார். தொடர்ந்து ராஜிவ் காந்தி மரணத்திற்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அவர்களுக்கு தமிழகத்தில் உதவி கரமாக இருந்த திமுகவினரையும், அக்கட்சியின் தலைவருமான மு. கருணாநிதியும் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார். 1996ம் ஆண்டு தேர்தல் தோல்வியை தொடர்ந்து பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற, இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரானார். தொடர்ந்து 2004ம் ஆண்டு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, 
 மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்.

கருணாநிதியை கடுமையாக சாடிய ஈவிகேஎஸ்

மத்திய அமைச்சரவையில் இருந்த போதும் தமிழ்நாட்டில், தங்களது கூட்டணி தலைமை கட்சியான திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கு சரியான மரியாதை தராததை சுட்டிக் காட்டி, சாதிப் பெயரை குறிப்பிட்டு கருணாநிதியை சாடினார். 2006ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போதிலும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் போனதை வைத்து, காங்கிரஸ் தயவில் ஆட்சி செய்வதை குறிப்பிட்டு  முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சியை திறனற்ற ஆட்சி என்று கூறி கடுமையாக விமர்சித்தார். அதைவிட ஜெயலலிதாவின் ஆதரவாளராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

ஜெயலலிதா உடனும் மோதல்

கருணாநிதியின் எதிர்ப்பை கையில் எடுத்த தேமுதிக கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த் உடன், வீடு தேடி சென்று இளங்கோவன் நட்பு பாராட்டினார். மேலும் அன்றைய காலகட்டத்தில் தான் இலங்கையில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக செயல்பட்டார். அதே எதிர்ப்பு நிலைபாட்டில் எதிரணியில் இருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர விரும்பினார்.  ஆனால்,  ஜெயலலிதா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈழத்தமிழர்கள் ஆதரவு நிலைபாட்டில் ஈடுபடுத்திக் கொண்டார். இதனால்,  இளங்கோவன் மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே அரசியல் களத்தில் பலமான எதிர்ப்பு நிலை உருவானது.

தொடர் தோல்விகள்:

கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தாலும், காங்கிரஸ் கட்சி 2009 மற்றும் 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது. ஆனால் அவரால் வெற்றி வாகை சூடமுடியவில்லை. இளங்கோவன் தமிழகத்தின் அன்றைய இரு பெரும் மக்கள் ஆதர்ச தலைவர்களான கருணாநிதி/ஜெயலலிதாவையும் அரசியல் நாகரிகம் கடந்து தரம் தாழ்ந்து பேசியதாலே, தமிழக மக்கள் மத்தியில் போட்டியிட்ட இரண்டு தேர்தலிலும் தொடர் தோல்வியடைந்தார் என்றும் கூறப்படுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின்பொது, அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றபோதும், தேனியில் களமிறங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Breaking News LIVE: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
Breaking News LIVE: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Embed widget