மேலும் அறிய

Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி தான் சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்றும், அவர்தான் ஏ1 என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, 

வலிமையாக இருக்க வேண்டும்:

சறுக்காமல், வழுக்காமல் இந்த இயக்கத்திற்கு விசுவாசமான தொண்டனாக இருப்பதால்தான் இத்தனை பொறுப்புகளை நான் வழங்கியிருக்கிறேன் என்று அம்மா கூறியுள்ளார். இந்த இயக்கம் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக நான் அயராது பணியாற்றி வருகிறேன். 

வெற்றி வாய்ப்பு:

அம்மா மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்திருக்கிறேன். அதிமுகவில் எனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 2019, 2021 மட்டுமின்றி மாநகரம், பேரூராட்சி, நகராட்சி அதற்கு பிறகு 2024 அவர் எடுத்த முடிவின் காரணமாக, பல சோதனைகள் காரணமாக கழகம் வெற்றி வாய்ப்பை இழந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.

எம்ஜிஆர் வரலாற்றைப் பார்த்தபோது அவர் தோல்வியை பார்த்தது  இல்லை. அம்மா மறைவிற்கு பிறகு நான்கு ஆண்டுகாலம் இயக்கத்தை வழிநடத்துவதற்காக சசிகலா அனைவரையும் அழைத்துப் பேசி, அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்து என்னிடம் 1 மணி நேரம் பேசிய பிறகு நானே சொன்ன கருத்து நாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். நாம் இருப்பது 122 பேர்தான். அந்த நிலை மாறிவிடக்கூடாது. 

பச்சைப் பொய்:

அன்று இவருக்காக பரிந்துரை கடிதத்தை எல்லாரிடமும் ஒப்புதல் பெற்றேன். எந்த தேர்தல் களத்திலும் இவர் பொறுப்பேற்று வெற்றி என்பதை எட்ட முடியாத சூழலில்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து, வெளியே சென்றவர்கள் மன வேதனையோடு ஆற்றாமல் துயரத்தோடு இருப்பவர்களை சேர்க்க வேண்டும் என்று கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்து பரிமாறப்பட்டது. 

செய்தியாளர் சந்திப்பில்  யாருமே என்னைப் பார்க்கவில்லை. பச்சைப் பொய் என்று சொன்னார். மக்கள் என்ன நினைக்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம். சோர்வோடு இருப்பவர்களை ஒருங்கிணைத்து சென்றால்தான் வெற்றியைப் பெற முடியும். 5ம் தேதிக்கு முன்பு அவரைச் சந்தித்த பிறகும் அவருடன் கூறினேன்.

கெடு விதிக்கவில்லை:

அனைவரும் சொல்வார்கள். 2026க்கு பிறகு நாம் ஏதாவது இயக்கத்தில் வெற்றி பெறவில்லை என்றால் யார் காரணம்? என்ற கருத்து பரிமாறப்படும் என்பதால்தான் அந்த கருத்தை பரிமாறினோம். அன்று 10 நாட்கள் பேச்சு தொடங்க வேண்டும் என்று சொன்னேன். இது கெடு இல்லை. ஒரு மாதம், ஒன்றரை மாதம் எடுத்துக்கொள்ளலாம். யாரைச் சேர்க்கலாம்? வேண்டாம்? என்பது பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டது. 

என்னைப் பொறுத்தவரை இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பணியாற்றினோம். 2024 தேர்தலில் ஏறத்தாழ படுதோல்வி. நம் இயக்கத்தை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டு்ம் என்றுதான் கருத்து பரிமாறப்பட்டது. அதிமுக புத்துயிர் பெற்று ஆட்சி நடக்க வேண்டும். அந்த கருத்துக்கு ஏற்ப என் கருத்துக்களை வெளிப்படுத்தினேனே தவிர, அதன்பின்பு அனைத்து பொறுப்புகளும் நீக்கப்பட்டிருக்கிறது. 

கொடநாடு கொலை வழக்கு:

என்னைப் பொறுத்தவரை இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும். இயக்கம்தான் உயிர் மூச்சு. நல்லாட்சி தமிழகத்தில் உருவாக்கவே இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினேன். என்னைப் பொறுத்தவரை தேவர் ஜெயந்திக்கு செல்லும்போது அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் பேசினேன்.  நீக்கப்பட்டவர்களுடன் பேசியது உண்மை. கொடநாடு வழக்கில் ஏன் இன்று வரை நாம் குரல் கொடுக்கவில்லை? அம்மா இல்லத்தில் 3, 4 கொலைகள் நடந்துள்ளது. 

ஏ1 எடப்பாடி பழனிசாமி:

நான் பி டீமில் இல்லை. அவர் ஏ1ல் இருக்கிறார். ஏ1 ஆகவே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு வருத்தப்படுகிறேன். கண்ணீர் சிந்துகிறேன். அப்படிப்பட்ட எனக்கு இந்த தீர்ப்பு மன வேதனையை அளிக்கிறது. 

எனக்கு ஒரு கடிதமாக அனுப்பியிருக்க வேண்டும். ஒரு சீனியர். அவருடைய சர்வாதிகாரப் போக்கில் அவர் இன்று உருவாக்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
USA H1B Visa: “AI டெக் வேணும்னா, USA-ல இந்தியர்கள் இருக்கணும்” கட்டணத்தை குறைங்க - ட்ரம்பிற்கு வார்னிங்
USA H1B Visa: “AI டெக் வேணும்னா, USA-ல இந்தியர்கள் இருக்கணும்” கட்டணத்தை குறைங்க - ட்ரம்பிற்கு வார்னிங்
TN Roundup: கரூர் விவகாரத்தில் அஜித் கருத்து... இன்று பேட்டி தரும் செங்கோட்டையன் - தமிழகத்தில் பரபரப்பு
TN Roundup: கரூர் விவகாரத்தில் அஜித் கருத்து... இன்று பேட்டி தரும் செங்கோட்டையன் - தமிழகத்தில் பரபரப்பு
Aadhaar Updates: வந்தது ஆதார் அப்டேட் - எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் - இனி கட்டாயமும், கட்டணமும்
Aadhaar Updates: வந்தது ஆதார் அப்டேட் - எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் - இனி கட்டாயமும், கட்டணமும்
Toyota New Launch: என்ன வேணும் உனக்கு, கொட்டி கொட்டி கிடக்கு.. SUV, பிக்அப்..15 கார் மாடல்கள் - டொயோட்டா அதிரடி
Toyota New Launch: என்ன வேணும் உனக்கு, கொட்டி கொட்டி கிடக்கு.. SUV, பிக்அப்..15 கார் மாடல்கள் - டொயோட்டா அதிரடி
Embed widget