Seeman: விஜய் கட்சிக்கு போங்க; சீட் கிடைக்கும்; நானே சேர்த்து விடுகிறேன் - சீமான் போட்ட பிட்டு! அதிர்ச்சியில் நாதகவினர்!
கோவையில் 18ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தமிழினப்பேரெழுச்சி பொதுக்கூட்ட ஏற்பாடுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேசினார்.

2026ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் நான் சொல்பவர்தான் வேட்பாளர் எனவும் இல்லையேல் வேறு கட்சிக்கு செல்லலாம் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பாக பேசியுள்ளார்.
கோவையில் 18ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தமிழினப்பேரெழுச்சி பொதுக்கூட்ட ஏற்பாடுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேசினார்.
அப்போது பேசிய அவர் “நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியினர் விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நாம் தமிழர் கட்சியிலிருந்து சென்று கேட்டால் மு.க.ஸ்டாலின் உடனடியாக போட்டியிட சீட் கொடுத்து விடுவார். நாம் தமிழர் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தம்பி விஜய் கூட தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பார். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் கூறுங்கள். நானே சேர்த்துவிடுகிறேன். என் மீது நம்பிக்கை இருந்தால் என்னுடன் வரலாம். இல்லையேல் செல்லலாம்.
நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்தான் வேட்பாளர். வென்றால் மாலை; இல்லை என்றால் பாடை. தேர்தலில் நாம் தமிழர் கட்சி சீட் பெற்றவர்கள் வெற்றி பெற்ற பிறகே தொகுதியில் இருந்து வெளியே வர வேண்டும். எப்படி இருந்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றுவிட்டால் சிறிது பால்டாயிலை குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்து விடுங்கள்.
நாம் தமிழர் கட்சி பேனரில் தொண்டர்கள் நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். பேனரில் தறுதலைகள் போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்துகொண்டு ஃபோட்டோ வைக்கக்கூடாது” என உத்தரவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

