மேலும் அறிய

Seeman: ’ஒரே பதில்தான்.. வாய்ப்பில்ல ராஜா..’ ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுத்த சீமான்.. கலகல பிரஸ்மீட்

தமிழ் தேசியத்தை விட்டு வந்தால் இணைந்து செயல்படலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சொன்ன கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ் தேசியத்தை விட்டு வந்தால் இணைந்து செயல்படலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சொன்ன கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியை பலப்படுத்தும் நோக்கில்  மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டைக்கு அவர் சென்றுள்ளார். 

அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்துள்ள பதிலும் பின்வருமாறு: 

கேள்வி: சீமான் அவர்கள் தமிழ் தேசிய கொள்கையை விட்டு வர வேண்டும். அப்படி வந்தால் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும்,  தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வியடைந்த ஒன்று. அது வீண் முயற்சி, என்றைக்கும் வெற்றி பெறாது என திருமாவளவனும் தெரிவித்துள்ளார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு சீமான், ‘ஹெச்.ராஜாவுக்கு ஒரே பதில் தான். உங்க கூட வர்றதுக்கு ‘வாய்ப்பில்லை ராஜா’என்பது தான் பதிலாகும். அதேசமயம் எங்க அண்ணன் திருமாவளவன் பொறுத்திருந்து பாருங்கள். அவர் தோற்றுவிட்டார் என சொல்லலாமே தவிர, யாரும் ஜெயிக்க முடியாது என சொல்வதற்கான உரிமை அவருக்கு கிடையாது. இந்த அரசியலை முதல்முறையாக கற்றுக் கொடுத்தது அவர் தான். பயிற்சி கொடுத்த ஆசிரியர் யாரும் ஓடி பதக்கம் வென்றதில்லை. பயிற்சி எடுத்த மாணவன் தான் வெல்கிறான்.

திருமாவளவன் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தோற்று தான் போய் விட்டது என்றால் பேசாமல் செல்லுங்கள். நான் தோற்றுப்போவேன் என்றால் ஏன் என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள். நான் தோற்றால் உங்களுக்கு என்ன?, இப்ப தான் தமிழ் தேசியம் வருது. பொறுத்திருந்து பாருங்கள்’ என தெரிவித்தார். 

தொடர்ந்து ஹெச்.ராஜா பாசமாக கூப்பிடுகிறாரே? என கேட்ட கேள்விக்கு, ‘நானும் பாசமாக தான் கூப்பிடுகிறேன். என்னுடைய வீட்டுக்கு வாங்க. என் மனைவி நல்லா மாட்டுக்கறி சமைப்பாங்க. சாப்பிட்டு பேசிகிட்டு இருப்போம். நட்பு வேறு.. உறவு வேறு..  அரசியல் கோட்பாடு என்பது வேறு’ என சீமான் கூறினார்.

மேலும், ‘ஹெச்.ராஜா இத்தனை நாட்களாக உங்களை எதிர்த்து பேசினார். தேசத்துரோகி என சொன்னார். திடீரென பாசத்தை காட்ட காரணம் என்ன? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் வளர்கிறனே மண்ணில்’ என காமெடியாக சீமான் பதில் அளித்தார். 

தலைப்பு செய்திகள்

"என் மகனுக்கு வேலை வாங்கித் தர்றேன்னு சிவசங்கர் ரூ.23 லட்சம் பணம் வாங்கினார்” - முன்னாள் அமைச்சர் மீது பரபரப்பு புகார்
MR Vijayabhaskar: காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
ஆவின் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு! பால் விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு
ஆவின் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு! பால் விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M.R. Vijayabhaskar resigned : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
MR Vijayabhaskar: காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
CM Vijay IAS and IPS Conference : தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
Domestic Violence: ”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Embed widget