மேலும் அறிய

School Reopening: 1 முதல் 8-ஆம் வகுப்புகள் தொடக்கம் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

தமிழ்நாட்டில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரும் 8-ஆம் தேதிக்கு பிறகு ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ,முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பு அறைகள் அமைத்திருக்க வேண்டும்,  ஒவ்வொரு வகுப்பறைகளிலும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், குறிப்பாக ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டு இருக்க வேண்டும் அதே போன்று 18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்களும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள  வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. இந்த வழிகாட்டுதலின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது.இதன்படி  மாணவர்களை சமூக இடைவெளியை அமர வைத்து ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாத 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரும் 8-ஆம் தேதிக்கு பிறகு ஆலோசிக்கப்படும் என்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

School Reopening: 1 முதல் 8-ஆம் வகுப்புகள் தொடக்கம் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 9, முதல் 12 வகுப்பு வரைக்கும் பள்ளிகள் திறக்கபட்டு நடைபெற்று வருகிறது. முதல் 8 நாட்களுக்கு  பள்ளிகளில்  ஆசிரியர்கள், மாணவர்கள் ,வருகை எப்படி உள்ளது என்பது குறித்து அந்த வருகைப்பதிவேட்டை  முழுமையாக சரிபார்க்கபடும், பின்பு பள்ளிகள் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை செய்து அறிவிப்பார். தொடக்கபள்ளி என்பது மிகவும் முக்கியமானது , மாணவர்களின் நலனை கருதி வரும் 8-ஆம் தேதிக்கு பிறகு முதல்வர் வழிகாட்டுதலை தெரிவிப்பார். கொரோனா தொற்று மாணவர்களுக்கு உறுதியானதை அடுத்து அவர்களை முழுமையாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொற்று பரவாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

School Reopening: 1 முதல் 8-ஆம் வகுப்புகள் தொடக்கம் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

கடந்த 2 நாட்களாக பள்ளி  மாணவ ,மாணவிகளுக்கு கொரோனா  தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஆசிரியர்களுக்கும் ஒரு சிலருக்கு அறிகுறிகள் உறுதி  செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் தொடர்பில் இருந்த  அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார். மேலும்  அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ,மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை பள்ளி வளாகம் உருவாக்கித் தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அரசு கூறிய விதிகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறதா, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளதா ,என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று  பரவாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மாவட்ட நிர்வாகம்  எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget