(Source: Poll of Polls)
School Leave: நள்ளிரவு முதல் கொட்டிதீர்க்கும் கனமழை.. சென்னை உட்பட 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் தலைநகர் சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையின் காரணமாக தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று 04.11.2023 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், செங்கல்பட்டு - மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை இல்லை வழக்கம் போல் செயல்படும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக சிவ்கங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழையின் அளவு குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.11.2023 மற்றும் 09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மல்லிமீட்டரில்)
அதிராம்பட்டினம்_ (தஞ்சாவூர்) 105.0, மீனம்பாக்கம்_ (சென்னை) 86.6, மதுரை ஏபி_ (மதுரை) 51.0, கடலூர்_ (கடலூர்) 48.0, புதுச்சேரி_ (புதுச்சேரி) 44.0, காரைக்கால்_ (KARAIKAL) 40.0, திருச்சிராப்பள்ளி _ (திருச்சிராப்பள்ளி) 32.0, பரங்கிப்பேட்டை_ (கடலூர்) 23.0, கன்னியாகுமரி_ (கன்னியாகுமரி) 18.0, தொண்டி_ (ராமநாதபுரம்) 17.0, நுங்கம்பாக்கம்_ (சென்னை) 16.2, பாளையம்கோட்டை_ (திருநெல்வேலி) 15.0, புழல்_ (திருவள்ளூர்) 82.5, தரமணி_ (சென்னை) 45.5, செம்பரம்பாக்கம்_ (காஞ்சிபுரம்) 32.0, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 31.0, வில்லிவாக்கம்_ (திருவள்ளூர்) 26.5, பூந்தமல்லி_ (திருவள்ளூர்) 25.0, பள்ளிக்கரணை (சென்னை) 24.1, சத்தியபாமா_பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 18.5 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது.