மேலும் அறிய

TN Ration Shop: இனி ஓடவும் ஒளியவும் முடியாது.! ரேஷன் கடையில் அசத்தல் திட்டம்- சிஎம் விஜய் போட்ட செம பிளான்

TN Ration Shop: தமிழக ரேஷன் கடைகள் மூலம் பல கோடி மக்கள் பயனடைந்து வரும் நிலையில், மக்களுக்கு உணவுப்பொருட்களை சுகாதாரமாகவும், கலப்படம் இல்லாமல் வழங்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மானிய விலையில் உணவுப்பொருட்கள்

சாப்பிட உணவு கிடைக்காமல் யாரும் தவிக்க கூடாது என மானிய விலையிலும், இலவசமாகவும் ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் உள்ள 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.  அரிசி, பருப்பு, கோதுமை, சக்கரை, பாமாயில்  உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவுப்பொருட்களில் அதிகளவு கலப்படம் உள்ளதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனையடுத்து புகாரை தீர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

பாக்கெட்டில் உணவுப்பொருட்கள்

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை இனி திறந்த மூட்டைகளில் இருந்து வழங்காமல், ‘பாக்கெட்’ வடிவில் சீல் வைக்கப்பட்டு விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள  34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு சாக்கு மூட்டை மூலம் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது ரேஷன் கடையில் சேமித்து வைக்கும் போது சுகாதாரமற்ற நிலையில் திறந்து வைக்கப்படுவதால் எலி, கரப்பான் பூச்சி உள்ளிட்டவைகள் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கி வருகிறது. இதே போல கடைகளில் கைகளால் அளந்து வழங்கப்படுவதால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் புகார்களும் எழுந்து வருகின்றன. 

தமிழக அரசின் புதிய திட்டம்

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு கிடங்குகளிலேயே அதிநவீன இயந்திரங்கள் மூலம் துல்லியமாக எடை போடப்பட்டு, முத்திரையிடப்பட்ட பாக்கெட்டுகளாகப் பொருட்களைத் தயாரிக்கத் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரிசியை 5 முதல் 10 கிலோ பாக்கெட் என்ற முறையிலும் சக்கரை, கோதுமையை ஒரு கிலோ முதல் 5 கிலோ பாக்கெட் வரை நவீன இயந்திரம் மூலம் அடைத்து நேரடியாக ரேஷன் கடைக்கு அனுப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் திறந்த நிலையில் வைக்கப்படும் பொருட்கள் ஈரப்பதம், தூசு, பூச்சிகளால் பாதிக்கப்படுவதும், தரம் குறைந்த பொருட்கள் கலக்கப்படுவதும் பாக்கெட் முறையினால் முற்றிலும் தடுக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் உயர்தரப் பொருட்கள் மக்களுக்குச் சென்றடைய வாய்ப்பு உருவாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் எடை போட்டு வாங்கும் நிலை மாற்றப்பட்டு உடனடியாக ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

சோதனை முறையில் விரைவில் அமல்

கடந்த திமுக ஆட்சி காலத்தில் ஒரு சில மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இதனை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தும் வகையில் விரைவில் ரேஷன் கடையில 'அத்தியாவசிய பொருட்கள் பாக்கெட்டில் சீல் வைத்து விநியோகிக்கப்படுவுள்ளது. இதனால் ரேஷன் பொருட்களில் எந்த வித முறைகேடும் செய்யமுடியாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget