Savukku Shankar: "தப்பு பண்ணிட்டேன்! அப்படி பேசியிருக்கக் கூடாது" சவுக்கு சங்கரா இப்படி பேசிருக்காரு?
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தான் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது தவறு என்றும், அப்படி பேசியிருக்கக்கூடாது என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூடியூப்களில் சர்ச்சைக்குரிய மற்றும் பரபரப்பான கருத்துக்களை கூறி பிரபலமானவர் சவுக்கு சங்கர். இவர் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கஞ்சா வைத்திருந்த வழக்கு என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் சவுக்கு சங்கர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தான் பேசியது தவறு என்றும், தான் மாற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். அந்த ஆடியோவில் சவுக்கு சங்கர் பேசியிருப்பதாவது,
நான் தப்பு பண்ணிருக்கேன்
ஃபேமிலினா ஃபேமிலி பாலிடிக்ஸ் பேசித்தான் தீரனும் ஒரு பத்திரிகையாளனா. பெர்சனலா தொட்டிருக்கக்கூடாது நான். பெர்சனால நான் பேசியிருக்கக்கூடாது. அவசியம் இல்லாத விஷயத்தை நான் கொடுத்துருக்கேன். இந்த முறை சப்போர்ட் குறைஞ்சுடுச்சு. ஏன்னா நான் தப்பு பண்ணிருக்கேன். அதுனால சப்போர்ட் குறைஞ்சுடுச்சு. அதே தப்பை நான் திருப்பி பண்ணா 40 முதல் 50 சதவீதம் இருக்கும் ஆதரவு இன்னும் குறைஞ்சுடுச்சானா யாரு எனக்கு ஹெல்ப் பண்ணுவா? எனக்கு இந்த தொழிலை விட்டா வேற தொழில் தெரியாது.
ஆதரவு குறைஞ்சுடுச்சு
எனக்கு பெர்சனல் அட்டாக் குறித்து யோசிக்குற தேவையே இல்ல. உள்ள போயிட்டு வெளிய வந்த பிறகு எதைப் பத்தியும் யோசிக்காம ஜெட் வேகத்துல போயிட்டு இருக்கேன். அதுல இந்த தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் பேசியிருக்கேன். பேசுனதாலதான் இந்த சிக்கல் வந்துருக்குனு தெரியுது. இப்போதான் உணர்ற தேவை வந்துருக்கு.
போன முறை போனப்ப 90 சதவீதம் ஆதரவு இருந்துச்சு.. இப்போ 50 சதவீதமா குறைஞ்சுடுச்சு. இதே வேலையானு சொல்லிட்டுதான் பெயில் கொடுத்தாங்க. இதுக்கு அப்புறம் பொறுப்புள்ள பத்திரிகையாளனா நடந்துக்குவேனு கோர்ட்ல சொல்லிருக்கேன்.
வயசாயிடுச்சு:
அது மட்டுமில்லாம எனக்கு வயசாயிடுச்சு. நான் 33ல ஜெயில் போனதுக்கும், 48ல ஜெயில் போனதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குது. எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை இருக்கு. நான் மட்டும் ஏன் கஷ்டப்படனும்? யாருக்காக கஷ்டப்பட்றேன்? நல்ல தனிப்பட்ட வாழ்க்கை இருந்துச்சுனா யோசிக்கலாம். என்னை யூஸ் பண்ணுனா எல்லாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை நல்லா இருக்குது. அதை காப்பாத்ததான் என்னை யூஸ் பண்ணிகிட்டாங்க...
பயன்படுத்திகிட்டாங்க:
என்கிட்ட சொல்லி யூஸ் பண்ணிகிட்டாங்க. அவங்க யூஸ் பண்ணிக்க நானே அனுமதிச்சேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தி பண்ணல. இனிமே நான் ஏன் அதை பண்ணனும்? எதுக்கு நான் இனிமே பண்ணனும்? கஷ்டம் இருக்கத்தான் செய்யும். வருமானம் குறையும். மாறித்தான் ஆகவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுட்டேன் சார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ சவுக்கு சங்கர் பேசியது என்று கூறப்படுகிறது. அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

