மேலும் அறிய

சாத்தனூர் அணையில் இருந்து 840 கனஅடி உபரி நீர் திறப்பு - 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 840 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நான்கு மாவட்ட மக்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7321 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையில் தேங்கும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனை வசதி பெறுகின்றன. தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் சாத்தனூர் அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வர தொடங்கியது. இதனால் அணைக்கு இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் அறிவழகன் நிருபர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் 307 கிலோமீட்டரில் 1954 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1957ஆம் ஆண்டில் சாத்தனூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் சென்னகேசவர் மலையில் உற்பத்தி ஆகி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் பாகலா கிராமத்தில் தமிழகத்தில் நுழைந்து மொத்தம் 432 கிலோ மீட்டரில் 125 கிலோமீட்டர் பயணம் செய்து கடலூருக்கு அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஆரம்ப காலத்தில் அணையின் கொள்ளளவு 4600 மில்லியன் அடியாகும். 1958 ஆம் ஆண்டு சாத்தனூர் அணை இரண்டாம் கட்ட பணி துவங்கப்பட்டு அணை நீர் தேக்கி கதவுகள் அடைக்கப்பட்டு இதன் கொள்ளளவு 8,100 மில்லியன் கனியாக உயர்த்தப்பட்டது.

சாத்தனூர் அணையில் இருந்து  840 கனஅடி உபரி நீர் திறப்பு -  4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தற்போது வண்டல் மண் வடிவின் காரணத்தால் இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கனியாக உள்ளது. கடையில் மொத்த நீளம் 780மீட்டர் ஆகும். கல்லணை 419 மீட்டர், மண்ணை 361 மீட்டர், அதன் நீர் பிடிப்பு பரப்பளவு 18 .25 சதுர கிலோமீட்டர் ஆகும். அணையில் இருந்து 7.5 கிலோமீட்டர் தொலைவில் பிக்கப் அணைக்கட்டு அழைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து வலது மற்றும் இடது புற வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஏரிகளுக்கும் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகளுக்கும் பாசன வசதி பெறுகிறது. மொத்தமாக சுமார் 50,000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. திருவண்ணாமலை செங்கம் புதுப்பாளையம் உட்பட 249 கிராமங்களில் குடிநீர் தேவனை பூர்த்தி செய்து வருகிறது. தானிப்பாடி வாணாபுரம் லாடபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் உட்பட 322.24 மில்லியன் கன அடி தண்ணீர் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாத்தனூர் அனல் மின் திட்டத்தின் வாயிலாக 7.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் வாயிலாக மீன் வளர்க்கப்பட்டு நாள்தோறும் பொதுமக்களுக்கு மின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீர்வளத் துறைக்கு மீன் வளர்ச்சி கழகத்தினால் வருவாய் செலுத்தப்பட்டு வருகிறது.

சாத்தனூர் அணையில் இருந்து  840 கனஅடி உபரி நீர் திறப்பு -  4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணை பூங்கா பகுதிகள் காலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதிச்சீட்டு மற்றும் கடைகளில் ஏழைகள் வாயிலாக சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. சாத்தனூர் அணை நீர்நிலை பயன்படுத்துவோர் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்கள் இடதுபுற கால்வாயில் 27 வலதுபுற கால்வாயில் 22 என மொத்தம் 49 சங்கங்கள் உள்ளன. தற்போது அணையின் நீர்மட்டம் 117.05 அடியாக உள்ளது. மேலும் பருவமழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு  வரும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீரை பாசன விதிமுறைகளின் படி வெளியேற்றப்பட்ட வேண்டியுள்ளதால் இன்று நிலவரப்படி அணைக்கு  480கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பதினொரு கண் மதகு வழியாக 840 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. என இவ்வாறு அவர் தெரிவித்தார். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget