மேலும் அறிய
Advertisement
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் தர சிபிஐ மீண்டும் எதிர்ப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கின் விசாரணையை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேயபனம் தெரிவித்தனர். இதேபோன்று பெனிக்ஸின் தாயார் செல்வராணி தரப்பிலும் ஜாமின் வழங்க்கூடாது என வாதிட்டனர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.
மாவடி கிராமத்தில் காமராஜர் சிலை வைக்க கோரிய வழக்கு - நெல்லை ஆட்சியர் முடிவெடுக்க உத்தரவு
நெல்லை மாவட்டம் மேலமாவடியை சேர்ந்த இளையபெருமாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில், "மாவடி கிராமத்தில் 2500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஒவ்வொரு ஆண்டும் காமராஜரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளையொட்டி எங்கள் கிராமத்தில் பிரதான சாலையில் மூன்று அடி உயரம் உள்ள காமராஜர் சிலையை வைத்த திட்டமிட்டிருந்தோம் அனுமதி கோரி அதிகாரிகளிடம் முறையாக மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. இங்கு சிலை வைப்பதால் எவ்வித சட்ட வழங்க பிரச்சனையும் ஏற்படாது ஆகவே மாவடி கிராம பிரதான சாலையில் காமராஜரின் மூன்றடி உயர சிலை வைக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் மனுதாரரின் மனுவை நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion