Ramadoss : சமத்துவ பொங்கல் விழா; நடனமாடி மகிழ்ந்த மருத்துவர் ராமதாஸ் !
Pongal 2025 : கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டபோது கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவனுடன் நடனமாடி மகிழ்ந்தார்

விழுப்புரம் : திண்டிவனம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டபோது கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவனுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 14 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் கல்லூரிகளில் மாணவர்கள் சமத்துவபொங்கலை வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்திலுள்ள சரஸ்வதி கலைக்கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கல்லூரி சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி நிறுவனர் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் ராமதாசை நடனமாடி வரவேற்றனர். தமிழர் திருநாளை கொண்டாடுவதில் மிகுந்த பற்றும் ஆர்வம் கொண்வராக உள்ள ராமதாஸ் மாணவர்கள் நடனமாடிய போது அவர்களுடம் இணைந்து இருகைகளை அசைத்து நடனமாடினார்.
அதன் பிறகு சிறுவன் ஒருவன் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடனமாடிய போது உற்சாக மிகுதியிலும் மகிழ்ச்சிலும் திளைத்த ராமதாசும் சிறுவனுக்கு ஏற்றவாரு இரு கைகளை அசைத்து நடனமாடி மகிழ்ந்தார்.
இதையும் படிங்க: Madurai : உசிலம்பட்டியில் இப்படியொரு கோயிலா.. வியந்து பாராட்டிய எம்.எல்.ஏ., ஐயப்பன்!
Festival 2025 Dates in Tamil Nadu:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முக்கியமாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது அறுவடை காலத்தை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. தை மாதம் 4 நாட்கள் சிறப்பம்சம் வாய்ந்த விழாவில், தைப் பொங்கல், இரண்டாவது நாளில் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை , மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியவை எந்த நாளில் கொண்டாப்படுகிறது மற்றும் இந்த பண்டிகைகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் தெளிவாக பார்ப்போம்
போகி பண்டிகை (ஜனவரி 13, 2025):
போகி பண்டிகை நாளில், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, பழைய, பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்துவர்.
பொங்கள் : ஜனவரி 14 – தை-1
தை பொங்கல் பண்டிகையானது சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறத., விவசாய நிலங்களை உயிரூட்டமாக வைத்திருக்க உதவிய, சூரியனுக்கு தெரிவிக்கும் நன்றியைக் குறிக்கிறது.
குடும்பங்கள் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை பால் மற்றும் வெல்லத்துடன், ஒரு புதிய மண்பானையில் சமைக்கும் கலவையானது செழுமையின் அடையாளமாக, பொங்கலாக நிரம்பி வழிகிறது.
இதையும் படிங்க: கண்ணீரை மறைக்க கண்ணாடி போட்ட அஜித்...ரசிகர்களுக்காக சிறப்பு வீடியோ
பொங்கல் என்று அழைக்கப்படும் உணவு, பழுப்பு சர்க்கரை, நெய், முந்திரி மற்றும் திராட்சையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, வாழை இலையில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு சூரிய கடவுளுக்கு முதலில் சமர்ப்பிக்கப்படுகிறது. தைப் பொங்கல் தமிழ் மாதமான தையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
மாட்டுப் பொங்கல் (ஜனவரி 15, 2025):
மாட்டுப் பொங்கல், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தில் கால்நடைகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மூன்றாவது நாள் கால்நடைகளை கௌரவிப்பதற்கும் அலங்கரிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் (ஜனவரி 16, 2025):
காணும் பொங்கல், இந்த நாள் குடும்ப உறவுகள் இணைவை குறிக்கிறது, இந்த தினத்தில் அன்பானவர்களுக்கு, பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் நாளாக பார்க்கப்படுகிறது.

