கரூரில் சாலை அமைத்ததாக கூறி ரூ.4 கோடி மோசடி - நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிக்கான ஒப்பந்தத்தை சங்கர் ஆனந்த் இன்ப்ரா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை போடப்பட்டதாக கூறி அவரது நிறுவனத்தை ஏமாற்றியுள்ளனர்.
கரூரில் நெடுஞ்சாலை போடப்பட்டதாக கூறி மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிகா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிக்கான ஒப்பந்தங்கள் டெண்டர் விடப்பட்டன. சங்கர் ஆனந்த் என்பவர் அரசு ஒப்பந்ததாரர். இவர் சங்கர் ஆனந்த் இன்ப்ரா என்ற பெயரில் நிறுவனம் நடத்துகிறார். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிக்கான ஒப்பந்தத்தை சங்கர் ஆனந்த் இன்ப்ரா என்ற பெயரில் நிறுவனம் நடத்துகிறார். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிக்கான ஒப்பந்தத்தை சங்கர் ஆனந்த் இன்ப்ரா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை போடப்பட்டதாக கூறி மக்கள் வரிப்பணத்தை சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நிறுவனம் ஏமாற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் புகார் அளித்தார். மேலும் கரூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்தது. இது தொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 4 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளியான சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நிறுவனத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே நெடுஞ்சாலை அமைப்பதாக கூறி மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றிய அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர், முன் விசாரணைக்கு வந்தது. மனு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, "மனுதாரர் புகார் மனு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலை துறை சார்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, 4 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெறுகிறது" என்றார்.
நெடுஞ்சாலை போடப்பட்டதாக கூறி மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றியதாக அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மற்றும் அவர் நிறுவனத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது, கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதை அடுத்து நீதிபதி, "வழக்கு தொடர்பாக இப்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28க்கு ஒத்தி வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்