Lord Shiva Statue : 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு..! திரளாக குவிந்த பக்தர்கள்...!
சீத்தப்பட்டி காலனியை அடுத்து அரசம்பாளையம் கிராமத்தில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து அடி உயரம் உள்ள சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கரூர் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம், நந்தி சிலை மீட்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் உள்ளிட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சீத்தப்பட்டி காலனியை அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள கந்தசாமி என்பவருக்கு சொந்தமான முருங்கை தோட்டத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்தச் செய்தி அப்பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சிவனடியார்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு வந்து சென்றுள்ளனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தரிசித்து செல்கின்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை பொருத்தும் பீடத்துடன் தோண்டி எடுத்தனர். தண்ணீர் ஊற்றி சிவலிங்கத்தை சுத்தப்படுத்தி பால், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தகவலறிந்த அரவக்குறிச்சி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள் சிவலிங்கம் சிலை சேதமைடைந்து காணப்படும் இடத்திற்கு விரைந்து சென்று சிவலிங்கத்தை மீட்டு அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள, இந்த பழமையான சிவன் கோவில் அமராவதி மற்றும் குடகனாறு இணையும் கூடுதுறையில் அமைந்துள்ளது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இந்த கோவில் சேதமடைந்து இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கரூர் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம், நந்தி சிலை மீட்பு. சீத்தப்பட்டி காலனியை அடுத்து அரசம்பாளையம் கிராமத்தில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து அடி உயரம் உள்ள சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது.அப்பகுதியில் உள்ள ஏராளமான சிவலிங்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே இருந்து வந்து, இந்த பழமை வாய்ந்த சிவலிங்கத்தை தரிசித்து செல்கின்றனர். அப்பகுதியை சுற்றி உள்ள மக்கள் சிவலிங்கத்தை வந்து பார்த்த வண்ணமே உள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டே உள்ளனர். அதனால், அந்த இடத்தில் கோவில் கட்டுவதாக பேச்சு எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதில் சிறப்பு வாய்ந்த
எல்.ஜி.பி நகரில் குடிகொண்டு அருள் பாலித்திருக்கும், ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ,ஸ்ரீ பாலமுருகன் மற்றும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவாமிகளுக்கு சதுர்த்தி முன்னிட்டு காலை, எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திரு மஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் நெய்வேத்தியம் காட்டப்பட்டு ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.