மேலும் அறிய
Republic Day 2023: இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை.! குடியரசு தின விழாவை புறக்கணித்தாரா திமுக எம்பி அப்துல்லா..?
புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

திமுக எம்பி எம்.எம். அப்துல்லா
புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்ததாக கூறப்படுகிறது. விழாவில் தனக்கு முறையான இருக்கை ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவை திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்து சென்றதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறி கொடியேற்றும் முன் சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திமுக எம்பி அப்துல்லாவை தொடர்புகொண்டு கேட்டபோது, தனக்கு முக்கியமான பணி இருப்பதாலேயே கிளம்பியதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















