தமிழ்நாட்டில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில்,  மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து கடந்த 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய அமலுக்கு வந்தது.  

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

* காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

* இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி செயல்படுத்த அனுமதி உண்டு.

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளலாம்.தமிழ்நாட்டில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு!

 * தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அனுமதி.

* மின் பணியாளர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரியலாம்.

* மின்பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

* இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

கடை திறக்கலாமா? வண்டி ஓடுமா? கறி கிடைக்குமா? முழு விபரம் இதோ!

* வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

* கல்வி, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

* இருசக்கர வாகனம் விநியோகிக்கும் கடைகள் வாகன பழுதுபார்க்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதி.

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு அவகாரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து பெற்று பயணிக்கு அனுமதிக்கப்படும்.

* திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காவும் மட்டும் மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - அதிக பாதிப்புள்ள 11 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகள்

Tags: Corona Virus lockdown lockdown imposed in Tamil Nadu

தொடர்புடைய செய்திகள்

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !