அங்கீகாரம் பெறாத மனை வாங்கியவரா? ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்! தவறவிடாதீர்
தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வரும் நாளை 1ம் தேதி முதல் www.onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விழுப்புரம்: அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் தனிமனைகளை வாங்கியவர்கள், வரன்முறை செய்து கொடுக்க இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனி மனைகளுக்கு வரன்முறை செய்ய பதிவு
தமிழக அரசு தற்போது நிலம் உள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனுமதியற்ற மனை பிறவிகளில் இடம் வாங்கியவர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறை படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளில் பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் மனை வாங்கியவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மனை பிரிவுகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்க 2017 ஆம் ஆண்டு மனைகள் வரைமுறைப்படுத்தப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் மீண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.. 2025-26 ஆம் ஆண்டுக்கான மானிய குழு கோரிக்கையின் பொழுது 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2026 ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
மனையின் பதிவு தேதி மற்றும் பிரிவு விவரங்களை சரி பார்க்க வேண்டும் இணையதளத்தில் உங்கள் மனையை பதிவு செய்யவும் தேவையான ஆவணங்களை தயார் செய்து கொண்டு சட்ட ஆலோசனை பெற்றால் சிறந்தது எனவும் கூறப்படுகின்றது
அதன்படி, தமிழகத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளில், கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட, முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளை வாங்கியவர்களுக்கு, எந்த காலக்கெடுவும் இல்லாமல், மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வரும் நாளை 1ம் தேதி முதல் www.onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





















