மேலும் அறிய

Ratna Stores: பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரன் கைது - என்ன காரணம்?

Ratna Stores: பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள்  விற்பனை நிறுவனமான ரத்னா ஸ்டோர் உரிமையாளர் சிவசங்கரன் கடன் மோசடி தொடர்பாக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரத்னா ஸ்டோர் உரிமையாளர்:

பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான ரத்னா ஸ்டோர் உரிமையாளர் சிவசங்கரன் கடன் மோசடி தொடர்பாக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கடன் வாங்கியுள்ளார். இதனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாதலால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவசங்கர் (56) என்பவரும், அவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 30.05.2018 தேதியிட்ட மேற்படி காசோலை மூலம் ரூபாய் 40 லட்சமும், 21.07.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் ரூபாய் 20 லட்சமும் ஆக மொத்தம் ரூபாய் 60 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் தங்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டுப்பத்திரம் அசல் ஆகியவற்றை அடமானமாக கொடுத்துள்ளனர். 

கொலை மிரட்டல்:

இதற்கிடையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த காலதாமதமானதால் மேற்படி சிவசங்கர் தனது கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தையும், 10.01.2020 தேதியிட்ட உறுதிமொழி பத்திரத்தையும் மீண்டும் அடமானமாக கொடுத்துள்ளார்.  

பின் சிவசங்கர் மேற்படி பைனான்ஸ் நிறுவனத்தினரிடம், தங்களால் கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றும், தாங்கள் அடமானம் வைத்த கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தை திருப்பித்தந்தால் அந்த காட்டேஜை விற்று பணத்தை தந்து விடுவதாக நம்பிக்கை வாக்குறுதி கொடுத்து அசல் ஆவணத்தை வாங்கிக் கொண்டு 20.01.2020 அன்று கொடைக்கானல் காட்டேஜை ரூபாய் 2 கோடிக்கு விற்பனை செய்து, பைனான்ஸ் நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்து, ரூபாய் 1,08,61,020/-க்கு காசோலைகள் கொடுத்துவிட்டு, காசோலையை பணமாக்கவிடாமல், மேற்படி காசோலைகள் தொலைந்துவிட்டதென்று அவரது வங்கிக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் (Stop Payment) என்று தெரிவித்து மோசடி செய்துள்ளார். மேலும் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பைனான்ஸ் நிறுவனத்தினரை கெட்ட வார்த்தையில் திட்டி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். 

கைது:

இதுகுறித்து ராஜம் பைனான்ஸ் கம்பெனி மேலாளர் பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமுக்கு உத்தரவிட்டார். 

அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தனி அலுவலாக ஏற்கனவே சென்னை சென்றிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன் ஜோதி ஆகியோர் மேற்படி சிவசங்கருக்கு குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி அழைப்பாணை சார்பு செய்து நேற்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று பேரூரணி சிறையிலடைத்தனர்.

பின்னணி:

சென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்...என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடை அது. 72 வருடம் பாரம்பர்யம் கொண்டது. சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சியில் ஒரு கடை. இப்படிப் பல கடைகள் இயங்கி வந்தன. இவற்றில், சுமார் ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். ரத்னா ஸ்டோர்ஸுடன் பிசினஸில் ஆயிரக்கணக்கான டீலர்கள் இருந்து வந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ -   வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ - வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
Embed widget